இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று முடிவுக்கு வந்தது. இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய சாதனை வெற்றியை பெற்றது.
இந்தத் தொடரில் முதல் போட்டியை இங்கிலாந்து வென்ற பொழுது, இரண்டாவது டெஸ்டுக்கு இந்திய அணி எப்படி திரும்பி வரும் என நிறைய எதிர்பார்ப்புகளும் விமர்சனங்களும் இருந்தன. குறிப்பாக ரோகித் சர்மா கேப்டன்சி மீது நிறைய விமர்சனங்கள் இருந்தது.
ஆனால் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முதல் டெஸ்டில் இருந்த ரவீந்திர ஜடேஜா மற்றும் கேஎல்.ராகுல் இருவருமே இல்லாமல் வந்து இந்திய அணி வென்றது.மூன்றாவது டெஸ்டில் அதைவிட பெரிய வெற்றியை இந்திய அணி பெற்று இருக்கிறது.
தற்போது இந்திய அணியின் மீது இருந்த எல்லா நெருக்கடிகளும் விலகி அப்படியே இங்கிலாந்து அணியின் மீது விழுந்து விட்டது. இப்போது இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் பாஸ் பால் அணுகுமுறையை மிகக் கடுமையாக விமர்சித்து பேசி எழுதி வருகிறார்கள்.
இந்த நிலையில் இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் நேற்று நடுவர்கள் மூன்று தவறான முடிவுகள் தங்களை பாதித்து விட்டதாக பேசியிருக்கிறார். இதேபோல் இரண்டாவது போட்டியிலும் ஜாக் கிரவுலிக்கு டிஆர்எஸ் முறை பற்றி பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பென் ஸ்டோக்ஸ் கூறும் பொழுது ” நாங்கள் மூன்று தவறான அப்பெயர் கால்-ல் இருந்தோம். இது டிஆர்எஸ்-ன் ஒரு பகுதி. நீங்கள் எப்பொழுதும் இப்படியான முடிவுகளில் ஒன்று அதிர்ஷ்டசாலியாக இருக்கிறீர்கள் இல்லை துரதிஷ்டசாலியாக இருக்கிறீர்கள். நாங்கள் நேற்று தவறான பக்கத்தில் துரதிஷ்டசாலியாக இருந்தோம். அதே சமயத்தில் இந்தியாவில் பந்து சுழலும் பொழுது நடுவர்களுக்கு களத்தில் மிகப்பெரிய வேலை இருக்கிறது.
என்னுடைய தனிப்பட்ட கருத்து என்னவென்றால், டிஆர்எஸ் முறையில் பந்து ஸ்டெம்பை தாக்கினால், நடுவர் அவுட் கொடுத்திருந்தாலும் கொடுக்காவிட்டாலும் அது அவுட் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அம்பயர்-கால் என்பது இருக்கக் கூடாது. இப்படி ஒன்று இருப்பதால்தான், அம்பயர்-கால் வரும் பொழுது நிறைய முணுமுணுப்புகளும் விமர்சனங்களும் வருகிறது.
இதையும் படிங்க : “சர்பராஸ்கான் பற்றி மும்பை வீரர்கள் சொன்னாங்க.. அப்பதான் அந்த முடிவை எடுத்தேன்” – ரோகித் சர்மா பேட்டி
ஆனாலும் இந்த ஆட்டத்தில் தோற்றதற்கு அதுதான் காரணம் என்று நான் கூற மாட்டேன். ஏனென்றால் 500 ரன்கள் என்பது மிகவும் பெரியது. சில நேரங்களில் உங்களுக்கு தவறான முடிவுகள் கொடுக்கப்படும் பொழுது அது உங்களுக்கு வலிக்கிறது. ஆனால் இதுவும் விளையாட்டின் ஒரு பகுதிதான்” என்று கூறியிருக்கிறார்.