“ஜெய்ஸ்வால் இளம் சச்சின் போல இருக்கிறார்.. பேட்டிங்கால் கிடையாது.. இதனால்தான்” – ரவி சாஸ்திரி பேச்சு

0
130
Ravi

இங்கிலாந்து அணிக்கு இந்தியாவில் நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகள் மட்டுமே தற்பொழுது முடிவுக்கு வந்திருக்கின்றன.

இதில் இரண்டு போட்டிகளை இந்திய அணி வென்று இருக்கிறது. வென்ற இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியின் இளம் துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் இரண்டு இரட்டை சதங்கள் அடித்திருக்கிறார்.

- Advertisement -

இதுவரை அவர் அடித்துள்ள மூன்று டெஸ்ட் சதங்களுமே 170 ரன்களை தாண்டி அடிக்கப்பட்டு இருக்கின்றன. அவர் சதத்தை அடித்தால் அதை பெரிய சகமாக மாற்றுகிறார். மும்பையில் பல போட்டிகளுக்கு இடையில் விளையாடியதால் இந்த பழக்கம் அவருக்கு உருவாகி இருக்கிறது.

மேலும் தான் அடித்து அதிரடியாக விளையாடுவதற்கு அணி நிர்வாகம் எல்லாச் சுதந்திரம் கொடுத்திருக்கும் பொழுதும், ஆடுகளத்தின் தன்மையும் ஆட்ட சூழ்நிலையும் எப்படி இருக்கிறது என்பதை பார்த்தே அவர் விளையாடுகிறார். இவர் கிரிக்கெட் திறமையாளராக மட்டுமில்லாமல், புத்திசாலியாகவும் இருப்பதால், எதிரணிக்கு பெரிய பிரச்சினையை ஒன்று செய்கிறார்.

மேலும் நேற்று அனில் கும்ப்ளே இவரிடம் பேசிய பொழுது, இவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் அவ்வப்போது லெக் ஸ்பின் வீசி வந்தார். அதை தொடர்ந்து விட்டுவிடாமல் பயிற்சி செய்த பேச வேண்டும் என கும்ப்ளே கூறியிருந்தார். ஜெய்ஸ்வால் கட்டாயம் பந்துவீச்சு பயிற்சியை விடமாட்டேன் என்றும் உறுதி கொடுத்திருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் ஜெய்ஸ்வால் பற்றி பேசி உள்ள ரவி சாஸ்திரி கூறும் பொழுது ” ஜெய்ஸ்வால் இன்று நிறைய முன்னேறி இருக்கிறார். அது பேட்டிங்கில் மட்டும் கிடையாது. களத்தில் அவருடைய செயல்பாடுகள் காரணமாக இது நடந்திருக்கிறது.

மேலும் முன்னோக்கி செல்லும் பொழுது, கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு அவர் ஒரு பகுதி நேர பந்துவீச்சு விருப்பமாகவும் இருக்க முடியும். அவரால் லெக் ஸ்பின் மற்றும் ஆப் ஸ்பின், மேலும் மிதவேக பந்துவீச்சு கூட பேச முடியும்.

இதையும் படிங்க : “என் டீமுக்கு எதிரா இப்படி பண்ணிட்டியே.. போப்பா சந்தோசமே இல்ல”- பட்லர் ஜெய்ஸ்வாலுக்கு வித்தியாச வாழ்த்து

இதன் காரணமாக எனக்கு ஜெயசுவாலை பார்க்கும்பொழுது இளமையில் சச்சின் டெண்டுல்கரை பார்த்தது போல இருக்கிறது. ஜெய்ஸ்வால் எப்பொழுதும் பிசியாகவே இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.