“ரவி பிஸ்னாய் என்னையும் இப்படியே விட்டுட்டா போதும்.. நம்பறேன்!” – ஆட்டநாயகன் அக்சர் படேல் பேச்சு!

0
678
Axar

நேற்றுடன் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் முடிவுக்கு வந்திருக்கிறது. இந்தத் தொடரை இந்திய அணி நான்குக்கு ஒன்று என கைப்பற்றி இருக்கிறது.

நேற்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ஐந்தாவது டி20 போட்டி நடைபெற்றது. இந்தத் தொடர் முழுக்கவே ஆட்டத்தின் இரண்டாம் பகுதியில் பனிப்பொழிவு கடுமையாக இருந்து வந்தது. ஆனால் நேற்று அதிசயமாக போட்டியில் பனிப்பொழிவு இல்லை. மேலும் நேற்று பேட்டிங் செய்ய சின்னசாமி மைதான ஆடுகளம் கொஞ்சம் கடினமாக வேறு இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய கூற, ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதத்துடன் இந்திய அணி 160 ரன்கள் எடுத்தது. இதற்கடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் முடிவில் 154 ரன்கள் மட்டுமே எடுத்தது. பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நேற்றைய ஆடுகளத்தில் பந்து நன்றாக திரும்பியது. மேலும் ஆடுகளம் மெதுவாகவும் இருந்தது. இதனால் பேட்ஸ்மேன்கள் சரியாக டைம் செய்து பந்தை விளையாட முடியவில்லை. இதை இந்திய சுழற் பந்துவீச்சாளர்கள் மிகச் சரியாக இந்த போட்டியிலும் பயன்படுத்தினார்கள். வழக்கம்போல ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் இந்திய சுழற் பந்துவீச்சை இந்த போட்டியிலும் சரியாக விளையாடவில்லை.

நேற்று நான்காவது ஓவருக்கு அழைக்கப்பட்ட ரவி பேசினாய் டிராவிஸ் ஹெட் விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்து வந்து ஆரோன் ஹார்டி விக்கட்டையும் கைப்பற்றினார். இதற்கு அடுத்து பந்து வீசிய அக்சர் படேல் மிகவும் கட்டுக்கோப்பாக வீசி ஆஸ்திரேலியாவின் ரன் வேகத்திற்கு முட்டுக்கட்டை போட்டார்.

- Advertisement -

மேலும் தன்னுடைய கடைசி ஓவருக்கு வந்து டிம் டேவிட்டை வெளியேற்றி இந்திய அணியின் வெற்றியை எளிதாக்கினார். நேற்று அவர் நான்கு ஓவர்களுக்கு 14 ரன்கள் ஒரு விக்கெட் என அசத்தினார். இவர் தென் ஆப்பிரிக்கா டி20 தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இவரே ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது பேசிய அவர் கூறும் பொழுது “இன்று பந்து வீசுவது கொஞ்சம் வேடிக்கையாக இருந்தது. ஏனென்றால் பனிப்பொழிவு இல்லை. இந்த தொடர் முழுக்க பனிப்பொழிவு இருந்தது. என்னுடைய முதல் பந்து சுழன்றவுடன் எனக்கு அது தெரிந்தது. மேலும் என்னுடைய விக்கெட் குறித்து நான் மனதுக்குள் சிரித்துக் கொண்டேன்.

நான் சிறிது இடைவெளிக்கு பிறகு வருகிறேன். நான் கொஞ்சம் பேட்டிங் செய்யவும் விரும்பினேன். ஓரிரு ஆட்டங்களுக்கு பிறகு நான் ரிதத்திற்கு வந்தேன். நான் ரவி பிஸ்னாயுடன் குஜராத்துக்காக இரண்டு போட்டிகள் விளையாடி இருக்கிறேன். எங்களுடைய பௌலிங் பார்ட்னர்ஷிப் நன்றாக இருக்கிறது. இது தொடரும் என்று நான் நம்புகிறேன்!” என்று கூறியிருக்கிறார்!