அஸ்வினிடம் இருக்கும் அது தோனி இடமே இல்ல.. அடுத்த ஜெய் ஷா அவர்தான் – பாக் ரஷித் லத்திப் வாழ்த்து

0
321
Ashwin

இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெற்றதற்கு பாகிஸ்தான் முன்னாள் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரசித் லத்தீப் மனம் திறந்து பாராட்டி இருக்கிறார்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் முடிவில் திடீரென தொடரின் பாதியிலேயே ஓய்வு பெற்று ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியா திரும்பிவிட்டார். இந்த நிலையில் அவரது ஓய்வுக்கான பின்னணி காரணங்கள் என்னவாக இருக்கலாம்? என்றும் இன்னொரு புறத்தில் அவர் ஓய்வு பெற்றதற்கான வாழ்த்துக்களும் வந்து கொண்டிருக்கின்றன.

- Advertisement -

டிரெஸ்ஸிங் ரூமில் மரியாதை கிடைக்காமல் இருக்கலாம்

இதுகுறித்து ரசீத் லத்தீப் கூறும் பொழுது “ஒருவேளை அஸ்வினுக்கு ஓய்வறையில் சரியான மரியாதை கொடுக்கப்படாமல் போயிருக்கலாம். ஆனால் அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. வாஷிங்டன் சுந்தரின் வருகையின் காரணமாக அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவடைவதாக அவர் உணர்ந்திருக்கலாம். அடுத்த இரண்டு டெஸ்டில் தன்னால் விளையாட முடியுமா? என்று அவர் சிந்தித்திருக்கலாம். அது ஒரு கட்டத்தில் கொதிநிலையை எட்டி இருக்கும்”

“இந்தியாவில் ஒரு கிரிக்கெட் வீரராக மேதையாக பலர் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை விட அஸ்வின் வேறு லெவலில் இருக்கிறார். அவரது குணங்கள் வேறு மாதிரியானவை. அவர் எதிர்காலத்தில் பிசிசிஐ மற்றும் ஐசிசிபதவிகளை கைப்பற்றலாம். அவர் மிகவும் திறமையானவர். என்னுடைய பக்கத்திலிருந்து அவருக்கு பாகிஸ்தான் சார்பாக வாழ்த்துக்கள்”

- Advertisement -

தோனியிடமே இல்லை

“அஸ்வின் சிறந்த கிரிக்கெட் வாழ்க்கையை கொண்டிருந்தார் அவரிடம் சர்வதேச டெஸ்ட் சதங்கள் ஆறு இருக்கிறது. இது தோனியிடமே கிடையாது” என்று அஸ்வினுக்கு மனம் திறந்து வெளிப்படையான வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க : பிரித்வி ஷாவின் எதிரி அவரேதான்.. இத்தனை தவறு செய்தார்.. இதனால்தான் நீக்கினோம் – எம்சிஏ அதிகாரி பேச்சு

ரசித் லத்தீப் கருத்து போலவே பலரும் ரவிச்சந்திரன் அஸ்வின் எதிர்காலத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்தில் பெரிய பதவிகளுக்கு செல்வார் என்று கூறுகிறார்கள். ஆனால் அவர் அதற்கு முன்பாகவே சிஎஸ்கே அணி நிர்வாகத்தில் பெரிய பதவிகளுக்கு வருவார் என மிக உறுதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் கூறுகிறார்கள். எப்படி இருந்தாலும் அஸ்வினின் சர்வதேச கிரிக்கெட் ஓய்வு காலம் மீண்டும் பரபரப்பானதாகவே அமையும் என்று நம்பலாம்!

- Advertisement -