வரவிருக்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 சீரிஸில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு பதிலாக அனுபவ வீரர் சஞ்சு சாம்சனுக்கு இந்திய பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரர் அஜின்க்யா ரஹானே ஆதரவு தெரிவித்துள்ளார்.
சஞ்சு சாம்சன் மீண்டும் இந்திய டி20 டீமிற்கு திரும்பியிருப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்திருக்கும் அஜின்க்யா ரஹானே, சஞ்சு ஒரு சிறந்த மேட்ச் வின்னர் என்றும் அவரது வருகை இந்திய டீமின் பலத்தை மேலும் அதிகரிக்கும் என்றும் பாராட்டி இருக்கிறார்.
மேலும் இதுகுறித்து அஜின்க்யா ரஹானே பேசும்போது “வேர்ல்ட் கப் தொடரில் விளையாடிய அதே டாப் த்ரீ பேட்டர்கள்தான் இந்த சீரிஸிலும் விளையாட வேண்டும் என நான் நினைக்கிறேன், சஞ்சு சாம்சன் சிறப்பாக செயல்பட்ட போதிலும் இரண்டு அல்லது மூன்று மேட்ச்களில் சரியாக ஆடாததால் டீமிலிருந்து டிராப் செய்யப்பட்டார், எனவே அவருக்கு மீண்டும் ஒரு சான்ஸ் கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், அபிஷேக் மற்றும் இஷான் கிஷனும் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள்” என்று கூறி இருக்கிறார்.
தொடர்ந்து பேசிய ரஹானே “வைபவ் சூர்யவன்ஷிக்கு வருங்காலத்தில் நிறைய வாய்ப்புகள் கிடைக்கும், எனவே தற்போதைக்கு சஞ்சு, அபிஷேக் மற்றும் இஷான் ஆகியோர்தான் டாப் த்ரீயில் விளையாட வேண்டும், வைபவ் தற்போது தன்னுடைய இயல்பான அக்ரசிவ் கேம் பிளானை மட்டுமே தொடர வேண்டும், இந்திய டீமிற்குள் வர அவருக்கு உதவிய அதே கேமை அவர் பேக் செய்ய வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.
மேலும் வைபவ் குறித்து கூறுகையில் “கிரிக்கெட் ஸ்கில்ஸ் தவிர்த்து கிரவுண்டிற்கு வெளியே மைண்ட் செட்டை பேலன்ஸ்டாக வைப்பது மிகவும் முக்கியம், இரண்டு அல்லது மூன்று வருடங்கள் கழித்து அவருடைய கேம் தானாகவே சேஞ்ச் ஆகும், ஐபிஎல், இந்தியா ஏ மற்றும் துலீப் ட்ராபி தொடர்களில் அவர் தொடர்ந்து ரன்களை குவித்து கன்சிஸ்டன்சியை நிரூபித்திருக்கிறார், எனவே மனதளவில் ஸ்டேபிளாக இருந்தால் மட்டுமே அவரால் தொடர்ந்து சிறப்பாக விளையாட முடியும்” என்று கூறி இருக்கிறார்.






