டி20 கிரிக்கெட்டில் இவர்கள் தான் சிறந்த வீரர்கள் ; ரஷீத் கான் தேர்ந்தெடுத்த டாப் 5 டி20 வீரர்கள்

0
823
Kane Williamson and Rashid Khan SRH

ரஷித் கான் தற்போதைய கிரிக்கெட் உலகின் ஓர் மாயாஜால சுழற்பந்து வீச்சாளர். உலகத்தர பேட்ஸ்மேன்கள் பலர் அவரை எதிர்க்க முடியாமல் திணறியுள்ளனர். உலகம் முழுவதும் நடக்கும் டி20 தொடர்களில் அவர் கலந்து கொண்டு அசத்தி வருகிறார். சென்ற தசாப்தத்தின் சிறந்த டி20 வீரராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மூன்று வித கிரிக்கெட்டில் 20 ஓவர் ஆட்டங்களுக்கே ரசிகர் பட்டாளம் அதிகம். அதற்கு முக்கிய காரணம் ஐ.பி.எல் என்றும் சொல்லலாம். டி20 போட்டிகளில் தன்னுடைய 5 சிறந்த வீரர்களை ரஷீத் கான் தேர்ந்தெடுத்து உள்ளார். அந்த 5 வீரர்களைப் பற்றி பின்வருமாறு பார்ப்போம்.

- Advertisement -

விராட் கோஹ்லி

சர்வதேச கிரிக்கெட்டில் சச்சினுக்கு அடுத்தப்படியாக விராட் கோஹ்லி கருதப்படுகிறார். லிமிடெட் ஓவர் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் என இரண்டிலும் சிறப்பாக செயல்படும் வீரர்களில் ஒருவர். சமீபத்தில் விராட் கோஹ்லி, டி20 போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்தார்.

டி20யில் இந்திய அணிக்காக மட்டும் 3158 ரன்கள் குவித்துள்ளார். அதில் அவருடைய சராசரி 52.65 ஆகும். எவ்வித ஃபார்மட்டாக இருந்தாலும் கோஹ்லி, தன்னுடைய பெயருக்கு பின்னால் அபார சாதனைகள் வைத்துள்ளார். ஆதலால் ரஷீத் கானின் பட்டியலில் கோஹ்லி இருப்பது ஆச்சரியம் அல்ல.

கேன் வில்லியம்சன்

கடந்த சில வருடங்களாக ரஷீத் காணும் வில்லியம்சனும் ஹைதராபாத் அணிக்காக ஆடி வருகின்றனர். விராட் கோஹ்லிக்கு பிறகு, மூன்று வித ஃபார்மட்டிலும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருபவர் கேன் வில்லியம்சன். 2018ல் வார்னர் இல்லாத ஹைதராபாத் அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றார். மேலும் அத்தொடரில் கேன் ஆரஞ் கேப்பும் வென்றார். டி20 போட்டிகளில் வில்லியம்சன் 5000 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஏபி டிவில்லியர்ஸ்

டிவில்லியர்ஸ், டி20 கிரிக்கெட்டின் லெஜன்ட். யார் பந்துவீசிலும் அதை நாலாபக்கமும் பறக்க விடுவார். அதனால் தான் ரசிகர்கள் அவரை ‘ 360° ஏபிடி ‘ என்றழைக்கின்றனர். உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களூம் இவருக்கு பந்துவீச அச்சம் கொள்வர். சர்வதேச டி20 போட்டி ஒன்றில், ஏபிடியின் அதிரடிக்கு ரஷீத் காணும் ஒரு முறை பலியாகினர். “ எந்தக் கட்டத்திலும் டிவில்லியர்ஸ், அதிரடியாக ஆடி ரன்களைக் குவிக்கக் கூடிய திறன் கொண்டவர் ” என்று ரஷீத் கான் புழக்ந்தார்.

கிரன் பொல்லார்ட்

டி20 ஃபார்மட்டில் அதிக அனுபவம் கொண்டவர் கிரன் பொல்லார்ட். அதிரடி ஆட்டக்காரரான பொல்லார்ட், 20 ஓவர் போட்டிகளில் 152.62 எனும் அபார ஸ்ட்ரைக் ரேட்டில் இதுவரை 11,236 ரன்கள் அடித்துள்ளார். பேட்டிங்கில் மட்டுமில்லாமல் பவுலிங்கிலும் அவர் 300 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். உலகிலேயே அதிக டி20 போட்டிகளில் ஆடிய வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார் பொல்லார்ட். இதுவரை 568 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

ஹர்திக் பாண்டியா

இப்பட்டியலில் இருக்கும் கடைசி வீரர் ஹர்திக் பாண்டியா. தற்போது ஒரு சில மாதங்களாக அவர் பந்துவீசாவிட்டாலும், இந்திய அணியின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராகவே கருதப்படுவார். பேட்டிங்கில் 2728 ரன்களும் பவுலிங்கில் 110 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். நடப்பு இந்திய அணியின் பினிஷராக பாண்டியா திகழ்கிறார். “ பாண்டியாவும் பொல்லார்டும் மிக முக்கியமான வீரர்கள். கடைசி 4/5 ஓவர்களில் 80 முதல் 90 ரன்கள் வரை சேஸ் செய்யக்கூடிய வல்லமை கொண்டவர்கள் ” என ரஷீத் கான் கூறினார்.