ரஞ்சி டிராபி 2024.. கேப்டன் திலக் வர்மா அதிரடி சதம்.. 77 ஓவர்களில் டிக்ளர் செய்து ஆச்சரியம்!

0
1180
Tilak

இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரான ரஞ்சி டிராபி இன்று முதல் துவங்கி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. மொத்தம் 38 அணிகள் பங்கு பெறும் இந்தத் தொடரில் இன்று 16 போட்டிகள் நடைபெறுகிறது.

இந்தத் தொடரில் பிளேட் பிரிவில் இடம் பெற்றுள்ள ஹைதராபாத் மற்றும் நாகாலாந்து அணிகள் மோதிக்கொண்ட போட்டி இன்று நடைபெறுகிறது. ஹைதராபாத் அணிக்கு கேப்டனாக இந்திய இளம் வீரர் திலக் வர்மா நியமிக்கப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

கடந்த ஆண்டில் ஆசியக் கோப்பை தொடருக்கு முன்பாகவே வெஸ்ட் இண்டிஸ் டி20 தொடரில் இந்திய அணியில் விளையாடும் முதல் வாய்ப்பை பெற்ற திலக் வர்மா, அடுத்து ஆசியக் கோப்பை இந்திய அணியில் இடம் பிடித்து ஒருநாள் கிரிக்கெட்டிலும் அறிமுகமானார். இதற்கு அடுத்து ருதுராஜ் தலைமையில் ஆசிய விளையாட்டுப் போட்டி இந்திய அணியில் இடம் பெற்றார்.

உலகக் கோப்பை அணியில் இடம் கிடைக்காத இவர் மீண்டும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான வெள்ளைப்பந்து இரண்டு தொடர்களிலும் வாய்ப்பைப் பெற்று விளையாடி, ஒரு நாள் தொடரில் தனது முதல் அரை சதத்தையும் பதிவு செய்தார்.

இந்த நிலையில் இன்று ரஞ்சி டிராபியில் ஹைதராபாத் அணி நாகலாந்துக்கு எதிரான போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்தது. ஹைதராபாத் அணியின் துவக்க ஆட்டக்காரர் தன்மய் அகர்வால் 109 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

ஹைதராபாத் அணிக்கு மூன்றாவது வீரராக வந்த ராகுல் சிங் அதிரடியாக விளையாடி 157 பந்துகளில் 23 பவுண்டரிகள் 9 சிக்ஸர்களுடன் 214 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இவருடன் ஜோடி சேர்ந்து விளையாடிய ஹைதராபாத் அணியின் கேப்டன் திலக் வர்மா அவரும் தன் பங்குக்கு அதிரடியாக விளையாடி 112 பந்துகளில் ஆறு பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் ஆட்டம் இழக்காமல் சதம் அடித்து அசத்தினார்.

இன்று ஹைதராபாத் அணி 76.4 ஓவர்கள் மட்டுமே பேட்டிங் செய்து ஐந்து விக்கெட் இழப்புக்கு 474 ரன்கள் குவித்து அதிரடியாக முதல் இன்னிங்சை டிக்ளர் செய்திருக்கிறது. சிறிய அணியான நாகலாந்தை சீக்கிரத்தில் சுருட்டி வெல்வதற்கு ஹைதராபாத் கேப்டன் திலக் வர்மா முடிவு செய்ததாக தெரிகிறது!