ரஞ்சி செமி பைனல்.. தமிழ்நாடு அணியின் 7 வருட தவத்தை கலைத்த துஷார் தேஷ்பாண்டே.. மும்பைக்கு எதிராக தடுமாற்றம்

0
717
Ranji

2024 ஆம் ஆண்டின் ரஞ்சி அரையிறுதி சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. ஒரு போட்டியில் விதர்பா மற்றும் மத்திய பிரதேச அணிகள் போட்டியிட்டு வருகின்றன.

இன்னொரு அரை இறுதி போட்டியில் மும்பை சரத் பவர் கிரிக்கெட் அகாடமி மைதானத்தில் தமிழ்நாடு அணி மும்பை அணிக்கு எதிராக விளையாடுகிறது.

- Advertisement -

மும்பை அணியின் பேட்டிங் யூனிட்டில் பிரிதிவி ஷா, ஸ்ரேயாஸ் ஐயர், ரகானே போன்ற அனுபவம் வாய்ந்த முன்னணி வீரர்கள் இருக்கிறார்கள். மேலும் பந்துவீச்சில் உள்நாட்டு சாம்பியன் பவுலர் சாம்ஸ் முலானி மற்றும் துஷார் தேஷ் பாண்டே ஆகியோர் இருக்கிறார்கள்.

தமிழக அணியில் சாய் சுதர்ஷன், நாராயணன் ஜெகதீசன் இந்திரஜித், சாய் கிஷோர், பிரதோஷ ரஞ்சன்பால், விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர் என அனுபவமும் திறமையும் வாய்ந்த இளம் வீரர்கள் பலர் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற தமிழ்நாடு தைரியமாக பேட்டிங் தேர்ந்தெடுத்து இன்னிங்ஸ் தொடங்கியது. ஆடுகளத்தில் கொஞ்சம் புட்கள் இருப்பது போல தெரிந்தது. இது மும்பை அணியின் வேகப்பந்து வீச்சுக்கு உதவி செய்தது.

- Advertisement -

மும்பை அணியின் வேகப்பந்து வீச்சை சர்துல் தாக்கூர் மற்றும் மொகித் அவஸ்தி இருவரும் துவங்கினார்கள். சாய் சுதர்ஷன் ரன் ஏதும் இல்லாமல் சர்துல் தாக்கூர் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். மற்றுமொரு துவக்க ஆட்டக்காரர் நாராயணன் ஜெகதீசன் 4 ரன்கள் எடுத்து மொகித் அவஸ்தி பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.

இதற்கு அடுத்து மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக பந்துவீச்சுக்கு வந்த சிஎஸ்கே துஷார் தேஷ்பாண்டே பிரதோஸ் ரஞ்சன் பால் 8, சாய் கிஷோர் 1, இந்திரஜித் 11 என வரிசையாக வெளியேற்றினார்.

இதையும் படிங்க : 258 ரன்.. 7 விக்கெட்.. சாதிக்குமா சிஎஸ்கே சிங்கங்கள்?.. நியூஸி-ஆஸி முதல் டெஸ்டில் விறுவிறுப்பான கட்டம்

இதனால் தமிழக அணி 42 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகள் என சரிந்து விட்டது. மேற்கொண்டு விஜய் சங்கர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் இணைந்து தமிழக அணியை மீட்க விளையாடி வருகிறார்கள். ஏழு வருடங்களுக்குப் பிறகு ரஞ்சி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்ற இந்திய அணி அரையிறுதியில் மும்பை அணியிடம் தடுமாறி வருகிறது.