258 ரன்.. 7 விக்கெட்.. சாதிக்குமா சிஎஸ்கே சிங்கங்கள்?.. நியூஸி-ஆஸி முதல் டெஸ்டில் விறுவிறுப்பான கட்டம்

0
241
Mitchell

2023-2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு ஆஸ்திரேலியா இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே தற்பொழுது போட்டி ஏற்பட்டு இருக்கிறது.

இதில் நியூசிலாந்து முதலிடத்திலும், இந்திய அணி இரண்டாவது இடத்திலும், ஆஸ்திரேலியா மூன்றாவது இடத்திலும் புள்ளி பட்டியலில் இருந்து வருகின்றன.

- Advertisement -

தற்போது இதிலிருந்து நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிக் கொள்ளும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. நேரடியாக இரண்டு அணிகளும் மோதிக் கொள்வதால் இது இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான தொடராக அமைகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்று நியூசிலாந்து பந்து வீச, முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணிக்கு கேமரூன் கிரீன் 174 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 383 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய நியூசிலாந்து அணிக்கு மோசமான அடி விழுந்தது. அந்த அணிக்கு தாக்குப்பிடித்து கிளன் பிலிப்ஸ் மட்டுமே அரை சதம் அடிக்க, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலியா அணியின் தரப்பில் சுழல் பந்துவீச்சாளர் நாதன் லயன் மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

இதற்கடுத்து முதல் இன்னிங்ஸில் 204 ரன்கள் முன்னிலை பெற்று விளையாடிய ஆஸ்திரேலியா அணி, இரண்டாவது வின்னிங்சில் 164 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. நைட் வாட்ச்மேன் நாதன் லயன் ஆஸ்திரேலிய தரப்பில் அதிகபட்சமாக 41 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் பகுதி நேர சுழல் பந்துவீச்சாளர் கிளன் பிலிப்ஸ் 45 ரன்கள் கொடுத்து ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.

இதற்கு அடுத்து நியூசிலாந்து அணிக்கு இலக்காக 369 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணியின் டாம் லாதம் 8, வில் யங் 15, கேன் வில்லியம்சன் 9 என சொற்ப ரன்களில் வெளியேறினார்கள்.

இதற்கடுத்து ஜோடி சேர்ந்த நியூசிலாந்து அணியின் மேலும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாட இருக்கும் டேரில் மிட்சல் மற்றும் ரச்சின் ரவீந்தரா இருவரும் மேற்கொண்டு விக்கெட் விடாமல் தடுத்து காப்பாற்றினார்கள்.

இதையும் படிங்க :பிசிசிஐ மாஸ் நியூஸ் பிளேயர்ஸ்க்கு குடுத்துருக்கு.. நல்ல நிர்வாகம்னா இதான்யா” – பாகிஸ்தான் கம்ரன் அக்மல் பேட்டி

டேரில் மிட்சல் 12, ரச்சின் ரவீந்தரா 56 ரன்கள் உடன் மூன்றாம் நாள் முடிவில் களத்தில் இருக்கிறார்கள். நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு இன்னும் 258 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் ஏழு வைக்கட்டும் இரண்டு நாட்களும் இருக்கின்றன. இந்த சிஎஸ்கே ஜோடி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 369 ரன்கள் துரத்தி சாதிக்குமா? என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

- Advertisement -