பிராட்மேனுக்கு கொஞ்சமும் பாபர் அசாம் சளைத்தவர் அல்ல.. ரமிஸ் ராஜா பெருமிதம்.. கேலி செய்யும் ரசிகர்கள்

0
475

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் பாகிஸ்தான் வீரர்கள் நியூசிலாந்து அணியின் இரண்டாம் தர வீரர்களுடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகின்றனர். இதில் பாகிஸ்தான் அணி 4 க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி உள்ளது.

கராச்சியில் நடைபெற்ற நான்காவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 335 ரன்கள் குவித்தது. இதில் கேப்டன் பாபர் அசாம் , 117 பந்துகளில் 107 ரன்கள் அடித்து அசத்தினார். இது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் அடித்த 18 வது சதமாகும்.

- Advertisement -

இதனை அடுத்து களம் இறங்கிய நியூஸ்லாந்த அணி 232 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்த நிலையில் தனது youtube சேனலில் பேசிய ரமீஷ் ராஜா, பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேனுடன் ஒப்பிட்டு பேசியிருக்கிறார்.

99. 96 சராசரி ரன்களை அடித்த சிறந்த கிரிக்கெட் வீரர் தான் பிராட்மன். இந்த நிலையில் இது குறித்து பேசிய ரமிஸ் ராஜா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் பிராட்மேனுக்கு கொஞ்சம் கூட சளைத்தவர் அல்ல.வெள்ளை நிற கிரிக்கெட் பந்தில் பாபர் அசாமை விட சிறந்த கிரிக்கெட் வீரர் யாரும் இல்லை. இது போன்ற சவால்கள் நிறைந்த கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து ரன் குவிக்கும் வீரரை நான் பார்த்ததில்லை.

பாபர் அசாம் பலமாக அவருடைய கிரிக்கெட் யுக்தி மற்றும் பொறுமையை தான் நான் பார்க்கிறேன். புற்கள் நிறைந்த ஆடுகளம் இல்லை கராச்சி போன்ற ஆடுகளம் என எந்த ஆடுகளமாக இருந்தாலும் சரி பாபர் அசாம் ரன் குவிப்பார். ஏனென்றால் அவரிடம் பேட்டிங் டெக்னிக்கில் எந்த குறையும் இல்லை என்று ரமீஷ் ராஜா பாராட்டியுள்ளார்.

- Advertisement -

இந்த நிலையில் இந்த வெற்றி குறித்து பேசிய பாபர் அசாம் உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் பாகிஸ்தான் அணி இந்த தொடரை கையாளுவதாக கூறினார். இந்தத் தொடரில் விளையாடி உலகக் கோப்பை தொடருக்கு சிறந்த 15 16 வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் இந்த அபார வெற்றி மூலம் ஐசிசி ஒரு நாள் போட்டிகளுக்கான தரவரிசையில் பாகிஸ்தான் அணி முதல் முறையாக முதலிடத்தில் பிடித்துள்ளது. தரவரிசை 2005 ஆம் ஆண்டு அமல்படுத்த நிலையில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான அணி இந்த சாதனையை படைத்துள்ளது.