நேற்று லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் தங்கள் சொந்த மைதானத்தில் ஆர்சிபி அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து அந்த அணியின் கேப்டன் ரஜத் படிதார் பேசியிருக்கிறார்.
தற்போது ஆர்சிபி அணி 5 போட்டிகளில் நான்கு போட்டிகளை வென்று 8 புள்ளிகள் உடன் ரன் ரேட் அடிப்படையில் முதல் இடத்தை புள்ளி பட்டியலில் பிடித்திருக்கிறது. இந்த ஆண்டும் அந்த அணியே ஐபிஎல் தொடரை வெல்லும் என பலரும் கூறி வருகிறார்கள்.
எனக்கே தெரியாது
இந்த போட்டியை வென்றது குறித்து பேசி உள்ள ரஜத் படிதார் கூறும் பொழுது “எங்களுடைய பந்து வீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. நான் டாஸ் வென்றது மிகவும் சிறந்த விஷயம் என்று நினைக்கிறேன். எங்களுடைய பவுலர்கள் ஆடுகளத்தில் பந்தை அடித்து வீசிய விதம் பார்ப்பதற்கு அற்புதமாக இருந்தது”
“குர்னால் பாண்டியா அடுத்து என்ன பந்து வீசுவார் என்று கேப்டனான எனக்கே தெரியாது. அதே சமயத்தில் அவர் மிகவும் தைரியமான பவுலர் என்று நான் சொல்லுவேன். மேலும் சுயாஸ் ஷர்மா பந்தை ஸ்டெம்ப் நோக்கி தொடர்ந்து சிறப்பாக வீசினார்”
என் வேலை எளிதாகி விடுகிறது
“புதிய பந்தை வீசுவதற்கு புவனேஸ்வர் குமார், கேசில்வுட் போன்றவர்கள் இருக்கும் பொழுது என்னுடைய வேலை மிகவும் எளிதாகி விடுகிறது. அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று யாரும் சொல்ல வேண்டியது கிடையாது. அவர்களுடைய அனுபவம் மற்றும் அறிவு போட்டிக்கு மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் உதவியாக இருந்து வருகிறது”
இதையும் படிங்க : உண்மைய சொல்றேன் நான் ஃபிட்டா இல்ல.. ரஜத் படிதாருக்கு இந்த அறிவுரையை சொல்லி இருக்கேன் – விராட் கோலி பேச்சு
“நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே பீல்டிங்கில் மிகவும் கவனம் செலுத்தினோம். குறிப்பாக பில் சால்ட் ஓடி சென்று ஒரு கையில் பிடிப்பதில் மிகவும் திறமையானவர். எனவே அப்படியான முறையில் அவர் மிக எளிதாக பந்தை பிடிக்கிறார். மேலும் அணியில் உள்ள எல்லோருமே சிறப்பாக பீல்டிங் செய்யக்கூடியவர்கள்” என்று கூறியிருக்கிறார்.






