உண்மைய சொல்றேன் நான் ஃபிட்டா இல்ல.. ரஜத் படிதாருக்கு இந்த அறிவுரையை சொல்லி இருக்கேன் – விராட் கோலி பேச்சு

0
14
Virat

நேற்று லக்னா அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை விராட் கோலி வென்றார். இத்துடன் அவர் இந்த போட்டி குறித்தும் பேசியிருக்கிறார்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 146 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 5 விக்கெட் இழப்புக்கு 15.1 ஓவரில் இலக்கை எட்டி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் இந்த போட்டியில் விராட் கோலி 34 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

ஆடுகளம் இப்படி இருந்தது

இந்த போட்டி குறித்து பேசி உள்ள விராட் கோலி கூறும் போது ” கடந்த போட்டியில் எனக்கு முழங்காலில் வலி இருந்தது. மேலும் உடல் நிலையும் சரியாக இல்லை. இந்த நிலையில் எனக்கு இன்னும் கொஞ்சம் முழங்காலில் வலி இருந்து வருகிறது. நான் இன்னும் 100 சதவீதம் முழு பிட்டாக இல்லை”

“இத்துடன் இந்த ஆடுகளம் மிகவும் மெதுவாக மாறியது. அதே சமயத்தில் நான் கடந்த போட்டியை விட இந்த போட்டியில் அதிரடியாக விளையாடியது மகிழ்ச்சியாக இருந்தது. நான் இந்த போட்டியை எடுத்துச் சென்ற விதத்திற்கு நானே நின்று முடித்துக் கொடுத்திருக்க வேண்டும். அதைச் செய்ய முடியாமல் போய்விட்டது”

- Advertisement -

படிதாருக்கு அறிவுரை

” எங்கள் அணியின் பேட்டிங் யூனிட் மிகவும் வலிமையாக இருக்கிறது. நாங்கள் ஐந்து விக்கெட் இழந்து விட்டால் கூட டேவிட் மற்றும் செப்பர்டு இருவரும் வருவார்கள் என்பது மிகப்பெரிய பலம். இவர்கள் நான்கு ஓவர்களில் 50 ரன்கள் எடுக்க முடியும். எங்களுக்கு இது மேல் வரிசையில் விளையாடும் பொழுது நிறைய சுதந்திரத்தை கொடுக்கிறது”

இதையும் படிங்க : ஆர்சிபி ரசிகர்கள் அற்புதமானவர்கள்.. ஆனால் சிஎஸ்கே ரசிகர்களின் அன்பு வார்த்தைகளால் விவரிக்க முடியாது – ஷேன் வாட்சன் உருக்கம்

“ஒவ்வொரு போட்டிக்கும் ரஜத் படிதார் முன்னதாக உள்ளே சென்று சூழ்நிலையை கணிக்க வேண்டும் என்று முடிவு உள்ளது. ஆனால் நான் அவரிடம் அவர் விளையாட செல்லும் பொழுது பவுலரின் மனநிலை மற்றும் பில்டர்கள் எங்கெங்கு நிறுத்தப்பட்டுள்ளார்கள் என்பதை எல்லாம் கவனிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -