ரஜத் பட்டிதாருக்கு மீண்டும் அதிர்ஷ்டமா?.. கே.எல்.ராகுல் நிலைமை என்ன?.. பிசிசிஐ தரப்பில் வெளியான தகவல்

0
206
Rajat

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி இமாச்சல் பிரதேஷ் தரம்சாலா மைதானத்தில் அடுத்த மாதம் மார்ச் ஏழாம் தேதி துவங்கி பதினொன்றாம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது.

இதற்கு நடுவில் மார்ச் இரண்டாம் தேதி ரஞ்சி டெஸ்ட் தொடர் அரை இறுதி போட்டிகள் நடக்க இருக்கின்றன. தமிழக அணி மும்பை அணியுடன் விளையாடுகிறது. இதற்காக இந்திய அணியில் இருந்து வாஷிங்டன் சுந்தர் தமிழ்நாட்டு அணிக்காக விளையாட விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

இதேபோல் தகுதி பெற்றுள்ள மத்திய பிரதேச அணிக்காக ஃபார்மில் இல்லாத ரஜத் பட்டிதாரை விடுவிப்பது தொடர்பாக யோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அவருக்கு இந்திய அணிகள் கொடுக்கப்பட்ட மூன்று வாய்ப்பையும் வீணாக்கி இருக்கிறார். எனவே அவரை ரஞ்சி அனுப்பி பார்முக்கு கொண்டுவர பிசிசிஐ நடக்கிறது.

இந்த சூழ்நிலையில் கேஎல்.ராகுல் காயம் குறித்து எந்த தெளிவான முடிவுகளும் இதுவரை கிடைக்கவில்லை என்று பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதுவரையிலான ஸ்கேன் முடிவுகளில் அவரது தொடையில் எந்தவிதமான காயம் குறித்த அறிகுறிகளும் தெரியவில்லை, ஆனால் கே எல் ராகுல் தனக்கு அசவுரியமாக இருப்பதாக கூறியிருப்பதாக சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக அவருடைய காயம் குறித்து உறுதியாக தெரிந்து கொள்வதற்காக தற்பொழுது கேஎல் ராகுல் தன்னுடைய பழைய மருத்துவரை தொடர்பு கொள்வதற்காக லண்டன் சென்று தங்கி இருக்கிறார். அங்கிருந்து என்ன தகவல் வருகிறது என்பதை பொறுத்தே கேஎல்.ராகுல் நிலைமை தெரியவரும்.

- Advertisement -

இதையும் படிங்க : 5வது டெஸ்ட்.. இந்திய அணியில் இருந்து தமிழக வீரர் ரிலீஸ்.. ரஞ்சி டிராபி அரை இறுதிக்காக அதிரடி முடிவு

ரஜத் பட்டிதாரை நீக்கி விட்டு தேவ்தத் படிக்கலுக்கு வாய்ப்பு தருவது மிகவும் சுலபமான விஷயம். ஆனால் கேஎல்.ராகுல் இல்லாத பொழுது ரஜத் பட்டிதாரை நீக்குவது சிக்கலை கொண்டு வரலாம். ஏனென்றால் எந்த வீரருக்காவது தலையில் அடிபடும் பொழுது, மாற்று வீரராக களம் இறங்கி விளையாடுவதற்கு தகுதியான வீரர் தேவை. இதன் காரணமாகவே பிசிசிஐ ரஜத் பட்டிதாரை ரஞ்சி அனுப்புவதற்கு யோசித்து வருகிறது. கேஎல்.ராகுலின் காயம் இவருக்கான வாய்ப்புகளை அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.