சென்னையின் கடவுள் தோனி.. நீங்க வேணா பாருங்க இது நடக்கத்தான் போகுது – அம்பதி ராயுடு பேச்சு

0
2140
Ambati

நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி 13 போட்டிகளில் விளையாடி ஏழு போட்டிகளை வென்று, ப்ளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் இருக்கிறது. மேலும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தங்களுடைய கடைசி போட்டியை விளையாடியும் முடித்திருக்கிறது. இந்த நிலையில் தோனி குறித்து அம்பதி ராயுடு மிகவும் புகழ்ந்து பேசி இருக்கிறார்.

நேற்று நடப்பு ஐபிஎல் சீசனில் தங்களது சொந்த மைதானத்தில் கடைசி போட்டியை ராஜஸ்தான் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி விளையாடியது. இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி சிறப்பாக விளையாடி வென்றது. இதன் காரணமாக பிளே ஆப் வாய்ப்பும் பிரகாசமாகி இருக்கிறது.

- Advertisement -

இந்தப் போட்டிக்கு முன்பாகவே, போட்டி முடிந்ததும் ரசிகர்கள் மைதானத்தில் சிறிது நேரம் காத்திருக்க வேண்டும் என சிஎஸ்கே அணி நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதன்படி போட்டி முடித்ததும் சிஎஸ்கே அணியினர் தங்களுடைய நன்றியை ரசிகர்களுக்கு தெரிவித்தார்கள். மேலும் தோனி வழக்கம்போல் ரசிகர்களை நோக்கி அவர் கையெழுத்திட்ட பந்துகளை அடித்து மகிழ்ச்சிப்படுத்தினார்.

இதுகுறித்து அம்பதி ராயுடு கூறும்பொழுது “தோனி சென்னையின் கடவுள். அவருக்கு வருங்காலத்தில் சென்னையில் கோயில்கள் கட்டப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். தோனி ஐந்து ஐபிஎல் பட்டங்களை தவிர இரண்டு சாம்பியன்ஸ் லீக் பட்டங்களையும் வென்று வந்திருக்கிறார்.

- Advertisement -

மேலும் இரண்டு உலகக் கோப்பை மகிழ்ச்சிகளையும் இந்தியாவுக்கு அவர் கொண்டு வந்தார். இதே போல ஐந்து ஐபிஎல் மற்றும் இரண்டு சாம்பியன்ஸ் லீக் வெற்றிகளையும் கொண்டு வந்தார். அவர் எப்பொழுதும் தனது அணி வீரர்கள் மேல் நம்பிக்கை வைக்கும் ஒரு கேப்டன். எப்போதும் சிஎஸ்கே மற்றும் இந்திய அணிக்காக அதைச் செய்தவர்.

இதையும் படிங்க : நாங்க ஜெயிக்க காரணம் டெல்லி கலீல் அகமதுதான்.. இதத்தான் கண்டுபிடிச்சோம் – ஆர்சிபி கேமரூன் கிரீன் பேட்டி

தோனி ஒரு ஜாம்பவான் மேலும் பலராலும் கொண்டாடப்பட கூடியவர். சென்னையில் அவருக்கு இதுவே கடைசி போட்டியாக இருக்கலாம் என ரசிகர்கள் நினைத்திருக்கலாம். அதனால் அவருக்கான கொண்டாட்டங்கள் மிக அதிகமாக இருந்திருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -