கடைசி 15 டி20 போட்டி.. 10 அரை சதம்.. ரியான் பராக் வெறித்தனமான பேட்டிங்.. 78 பந்தில் 130 ரன் பார்ட்னர்ஷிப்

0
125
Riyan

2024 17வது ஐபிஎல் சீசனில் இன்று ராஜஸ்தான் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக் இருவரும் சிறப்பான பேட்டிங் மூலம் காப்பாற்றி இருக்கிறார்கள்.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக வந்த ஜெய்ஸ்வால் 24 (19), ஜோஸ் பட்லர் 8 (10) ரன்கள் எடுத்து ஆரம்பத்திலேயே வெளியேறினார்கள். இதற்கு அடுத்து ஒரு விக்கெட்டை சீக்கிரத்தில் கைப்பற்றினால் கூட குஜராத் டைட்டன்ஸ் பக்கம் ஆட்டம் வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக் இருவரும் ஜோடி சேர்ந்து ஆரம்பத்தில் பொறுப்பாக விளையாடிய பிறகு அதிரடியில் மிரட்ட ஆரம்பித்தார்கள். ரியான் பராக் பேட்டிங் செய்ய வந்த உடனே ரஷித் கான் பந்துவீச்சில் இரண்டு கேட்ச் வாய்ப்புகளை கொடுத்தார். ஆனால் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் அதை தவறவிட்டார். அதற்கான பலனை இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அனுபவித்து இருக்கிறது.

மிகச் சிறப்பாக விளையாடிய இந்த ஜோடியில் இருவருமே அரை சதம் அடித்தார்கள். அதிரடி காட்டிய ரியான் பராக் 48 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்கள் உடன் 76 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் இது அவருக்கு மூன்றாவது அரைசதம் ஆகும். இந்த ஜோடி 78 பந்துகளில் 13 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

மேற்கொண்டு விக்கெட்டை விடாமல் இருபது ஓவர்களை நிறைவு செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் சேர்த்தது. கேப்டன் சஞ்சு சாம்சன் ஆட்டம் இழக்காமல் 36 பந்துகளில் ஏழு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உடன் 68 ரன்கள் எடுத்தார். சிம்ரன் ஹெட்மயர் ஐந்து பந்துகளில் 13 ரன்கள் எடுத்தார். ரஷித் கான் நான்கு ஓவர்களுக்கு 18 ரன்கள் தந்து ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதையும் படிங்க : 2018 ராகுல் டிராவிட் ஸார் சொன்னது.. அந்த வார்த்தை தான் என்னை வழி நடத்திட்டு வருது – சுப்மன் கில் பேட்டி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரியான் பராக் உள்நாட்டு டி20 போட்டிகள் ஓடு சேர்த்து, கடைசி 15 டி20 போட்டிகளில் பத்து அரை சதங்கள் அடித்திருக்கிறார். மேலும் இதில் ஏழு அரை சதங்களை உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ந்து அடித்து டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்திருக்கிறார். அவருடைய கடைசி 15 டி20 போட்டிகளில் 771 ரன்களை 90 ரன் ஆவரேஜ் மற்றும் 170 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.