நான் அந்த ஒரு தப்பை மட்டும் பண்ணி இருந்தா.. ஆர்சிபி கிட்ட வசமா மாட்டியிருப்போம் – ரோமன் பவல் பேட்டி

0
960
Powell

நேற்று ஐபிஎல் தொடரில் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தகுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு நான்கு கேட்ச் மற்றும் முக்கியமான நேரத்தில் போட்டியை ஃபினிஷ் செய்து கொடுத்த ரோமன் பவல் ஆட்டம் குறித்து பேசி இருக்கிறார்.

இந்த போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் ரஜத் பட்டிதார் அதிரடியாக விளையாடி 22 பந்தில் 34 ரன்கள் எடுத்தார்கள். பந்துவீச்சின் சிறப்பாக செயல்பட்ட ஆவேஷ் கான் 3 மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 30 பந்தில் 45 ரன் மற்றும் மிடில் வரிசையில் ரியான் பராக் 26 பந்தில் 36 ரன்கள் எடுக்க, ராஜஸ்தான் 19 ஓவரில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் ஆர்சிபி அணியின் கேப்டன் பாப் டு பிளேசிஸ் அடுத்த பந்தை ரோமன் பவல் அருமையான முறையில் கேட்ச் பிடித்தார். இதுதான் ஆர்சிபி அணியின் முதல் சரிவுக்கு காரணமாக அமைந்தது. அடுத்து பார்ட்னர்ஷிப் உருவான பொழுது கிரீன் கேட்சை பிடித்தார். மேலும் கடைசி கட்டத்தில் பேட்டிங்கில் முக்கியமான நேரத்தில் 8 பந்தில் 16 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்து வைத்தார்.

இந்த நிலையில் போட்டிக்கு பிறகு பேசிய ரோமன் பவல் “சூழ்நிலை மிகவும் அவ்வளவு கடினமாக இல்லை. பந்தை பார்த்து விளையாட வேண்டி இருந்தது. சிங்கிள்ஸ் எடுப்பதை விட பாசிட்டிவாக இருந்து விளையாட வேண்டும் என்று நினைத்தேன். இதை ஹெட்மயரிடம் சொல்ல விரும்பினேன். ஆனால் துரதிஷ்டவசமாக அவர் ஆட்டம் இழந்து விட்டார். நான் கொஞ்சம் முன்னதாகவே பேட்டிங் பொசிஷனை எடுத்துக் கொள்வேன். ஆனால் தற்போது நான் எடுத்திருக்கும் ரோலில் சிறப்பாக செயல்பட்டு தொடர விரும்புகிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க : தோத்தது வலிக்குது.. உறுதியா அடுத்த ஐபிஎல் கோப்பை ஆர்சிபிக்கு தான் – ஏபி டி வில்லியர்ஸ் நம்பிக்கை

இன்று நான் பிடித்த நான்கு கேட்ச்களில் பாப் டு பிளேசிஸ் ஸ்கெட்ச் மிகவும் முக்கியமானது. அதை நான் சரியாகப் பிடித்த காரணத்தினால் தான் மற்ற மூன்று கேட்ச் வாய்ப்பையும் பிடிக்க முடிந்தது. ஒருவேளை நான் அதை தவற விட்டு இருந்தால், எங்களுக்கு ஒரு கடினமான நாளாக அமைந்திருக்கும். விராட் மற்றும் பாப் போன்ற வீரர்கள் இருக்கும் பொழுது நீங்கள் அவர்கள் தரும் வாய்ப்பை பெற வேண்டும் என்று விரும்புவீர்கள். நாங்கள் தற்போது நல்ல நிலையில் இருக்கிறோம் அடுத்த போட்டி சென்னையில் விளையாட காத்திருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.