தோத்தது வலிக்குது.. உறுதியா அடுத்த ஐபிஎல் கோப்பை ஆர்சிபிக்கு தான் – ஏபி டி வில்லியர்ஸ் நம்பிக்கை

0
117

நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டாவது ப்ளே ஆப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

தொடர்ச்சியாக ஆறு வெற்றிகளை பெற்று முன்னேறிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்த தோல்வியின் மூலம் பரிதாபமாக இந்தத் தொடரில் இருந்து வெளியேறுகிறது. தோல்விக்குப் பிறகு ஆர்சிபி முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் நம்பிக்கை கூறிய வார்த்தைகளை கூறி ஆறுதல் படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

அகமதாபாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ராஜத் பட்டிதார் 34 ரன்கள், விராட் கோலி 33 ரன்களும், லோம் ரோர் 32 ரன்களும் குவித்தனர். ராஜஸ்தான் அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய அஸ்வின் வலுவான இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதற்குப் பிறகு களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுக்க, ரியான் பராக் 36 ரன்களும், ஹெட்மயர் 26 ரன்களும் குவித்து ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர். தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் அதிகபட்சமாக 45 ரன்கள் விளாசினார். இதன் மூலம் ராஜஸ்தான் அணி 174 ரன்களை 19 ஓவர்களில் அடைந்து வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த தோல்வியின் மூலம் தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து நம்பிக்கையை ஏற்படுத்திய பெங்களூர் அணி முக்கியமான போட்டியில் ஏற்பட்ட தோல்வியின் மூலம் ஐபிஎல் தொடரிலிருந்து பரிதாபமாக வெளியேறியது. இந்த தோல்வி குறித்து ஆர்சிபி அணியின் முன்னாள் வீரரான ஏபி டிவில்லியர்ஸ் தோற்றது வேதனை அளித்தாலும் அடுத்த ஆண்டு ஆர்சிபி அணி நிச்சயமாக கோப்பையைக் கைப்பற்றும் என்று கூறியிருக்கிறார்.

இதுகுறித்து ஏபி டிவில்லியர்ஸ் விரிவாக கூறும்பொழுது
“தோல்வியடைவது என்பது எப்பொழுதுமே வேதனையானது. ஆனால் ஒரு ரசிகனாக மே மாத தொடக்கத்தில் எல்லா நம்பிக்கையும் இழந்து விட்டது போல தோன்றினாலும், ஆர்சிபி வீரர்கள் தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து நம்பிக்கை அளித்தார்கள். அடுத்த ஆண்டு பெங்களூரு அணி நிச்சயமாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி அதை வீட்டிற்கு கொண்டு வருவார்கள் என்று நம்புகிறேன்” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க:6 அணிகள்.. 4842 ரன்கள்.. ஐபிஎல்-ல் ஓய்வு பெற்ற தினேஷ் கார்த்திக்.. நெகிழ்ச்சியான பிரியாவிடை

டிவில்லியர்சின் இந்த ட்விட்டர் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. நாளை நடைபெற உள்ள இரண்டாவது பிளே ஆஃப் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியை எதிர்த்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடும். இதில் வெற்றி பெறும் அணி வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணியினை எதிர்த்து விளையாடும்.

- Advertisement -