2022 ஐபிஎலில் 863 ரன்கள் – டேவிட் வார்னரின் 6 வருடச் சாதனையை முறியடித்துள்ள ஜோஸ் பட்லர்

0
51

2022ஆம் ஆண்டு டாடா ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் தற்பொழுது அகமதாபாத்தில் கோலாகலமாக பிரம்மாண்டமான நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய ராஜஸ்தான் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் குவித்துள்ளது.ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 35 பந்துகளில் 39 ரன்கள் குவித்தார். குஜராத் அணியில் சிறப்பாக பந்து வீசிய ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

டேவிட் வார்னரை பின்னுக்கு தள்ளிய ஜோஸ் பட்லர்

- Advertisement -

ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் ஒரு சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் விராட் கோலி இருக்கிறார். 16 இன்னிங்ஸ்களில் 973 ரன்கள் அவர் குவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பின்னர் டேவிட் வார்னர் 17 இன்னிங்ஸ்களில் 248 ரன்கள் குவித்து இரண்டாவது இடத்தில் இருந்து வந்தார்.தற்பொழுது அவரை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்திற்கு ஜோஸ் பட்லர் முன்னேறி இருக்கிறார்.

நடப்பு சீசனில் 17 இன்னிங்ஸ்களில் 4 சதம் மற்றும் 4 அரை சதம் என மொத்தமாக 863 ரன்கள் குவித்துள்ளார். நடப்பு சீசனில் இவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 57.53 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 149.05 ஆகும். நடப்பு சீசனில் மட்டும் அவர் 83 பவுண்டரி மற்றும் 45 சிக்சர் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு ஒரு சீசனில் அதிக ரன்கள் குவித்த ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் மத்தியில் ரஹானே முதலிடத்தில் இருந்து வந்தார். 2012 ஆம் ஆண்டு அவர் 16 இன்னிங்ஸ்களில் 560 ரன்கள் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது அவரையும் பின்னுக்குத் தள்ளி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் மத்தியில் ஒரு சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் ஜோஸ் பட்லர் முதலிடம் பிடித்திருக்கிறார்.

- Advertisement -

131 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் தற்போது குஜராத் சேசிங் செய்து கொண்டிருக்கிறது.4.3 ஓவர் முடிவில் அந்த அணி 23 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.