சிக்ஸர் அடித்தால் வித்தியாசமான பரிசு.. நாளை ஆர்சிபி-க்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அறிவிப்பு

0
535
IPL2024

நாளை ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இரு அணிகளும் அடிக்கும் ஒவ்வொரு சிக்ஸருக்கும் சிறப்பு பரிசு ஒன்றை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

தற்பொழுது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடி இருக்கும் மூன்று போட்டிகளிலும் வென்று புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அதே சமயத்தில் விளையாடிய நான்கு போட்டிகளில் ஒரு போட்டியை வென்று மூன்று போட்டிகளில் தோற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்தில் இருக்கிறது.

- Advertisement -

மேலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பந்துவீச்சு வரிசை மிகவும் பலவீனமாக காணப்படுகிறது. தற்போதைக்கு அந்த அணியில் யாஸ் தயால் மட்டுமே குறிப்பிடும்படி பந்து வீசுகிறார். முதன்மை வேகபந்துவீச்சாளரான சிராஜ் தற்பொழுது பந்துவீச்சு பார்ம் இல்லாமல் இருந்து வருகிறார். இது மட்டும் இல்லாமல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் சரியான சுழற் பந்துவீச்சு யூனிட் கிடையாது.

இப்படியான நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் நாளைய போட்டியில் இரு அணிகளும் அடிக்கும் ஒவ்வொரு சிக்ஸருக்கும் ராஜஸ்தானில் ஆறு வீடுகளுக்கு சோலார் சூரிய மின்சக்தி உபகரணத்தை வழங்குவதாக அறிவித்திருக்கிறது. நாளைய போட்டியில் அதிக சிக்ஸர்கள் வருவதின் மூலம் ராஜஸ்தானில் அதிக வீடுகளுக்கு இந்த பரிசு கிடைக்க இருக்கிறது.

ஏற்கனவே பலவீனமாக இருக்கும் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பௌலிங் யூனிட்டுக்கு எதிராக, வலிமையான ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங் வரிசை நிறைய சிக்ஸர்கள் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ராஜஸ்தானில் உள்ள நிறைய வீடுகளுக்கு வெளிச்சத்தை கொடுக்கப் போகிறது என்று சமூக வலைதளத்தில் ட்ரோல்கள் நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : கேப்டன் பொறுப்பு கொடுத்ததும்.. ருதுராஜ்கிட்ட நான் இத தேடிக்கிட்டே இருந்தேன் – மைக் ஹசி பேட்டி

மேலும் நாளைய போட்டியில் பெண்களை ஆதரிக்கும் விதமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முழுக்க பிங்க் நிறத்திலான சீருடையை அணிந்து விளையாடுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதேபோல ஆர்சிபி அணி பசுமையை வலியுறுத்தும், மரங்களை நடுவதற்காக பச்சை ஜெர்சியில் விளையாடி வந்ததும் குறிப்பிடத்தக்கது