நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 59வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ராஜஸ்தான் அணி தொடர்ந்து மிக நெருக்கமான முறையில் தோல்வியடைவது ராஜஸ்தான் அணிக்கு இது ஐந்தாவது முறையாக அமைந்திருக்கிறது.
இந்த சூழ்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இந்த தோல்வி குறித்து சில முக்கியமான விஷயங்கள் பேசி இருக்கிறார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் தோல்வி
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதட்டம் காரணமாக ஐபிஎல் தொடர் ஆனது ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் போட்டிகள் நேற்று முதல் ஆரம்பித்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் குவித்தது. அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து ஏமாற்றத்தை சந்தித்தது.
தொடர்ச்சியாக 1 ரன், 2 ரன், டை மற்றும் 10 ரன் என ஐந்தாவது முறை ராஜஸ்தான் அணி வெற்றி இலக்கை நெருங்கி வந்து தோல்வி அடைந்திருக்கிறது. மேலும் 14 கோடி ரூபாய்க்கு தக்கவைக்கப்பட்ட துருவ் ஜூரேல் மீது அதிகப்படியான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. 31 பந்துகளில் 53 ரன்கள் அவர் எடுத்தாலும் அது அணியின் வெற்றிகளுக்கு போதுமான பங்களிப்பை வழங்காததால் அவர் மீது விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் அணியின் பயிற்சியாளர் டிராவிட் இது குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
அவரை குறை சொல்ல முடியாது
இதுகுறித்து டிராவிட் விரிவாக கூறும்போது “நாங்கள் மீண்டும் திறமையை கண்டோம். எங்களிடம் வைபவ், ஜெய்ஸ்வால், துருவ் மற்றும் ரியான் பராக் போன்ற இளம் இந்திய திறமைகள் இருக்கின்றனர். அவர்கள் இன்னும் ஒரு வருடத்தில் சிறப்பான வீரர்களாக மாறுவார்கள். மேலும் துருவ் ஜூரேல் பற்றி கூறும் போது அவர் ஒவ்வொரு நிலையிலும் ஓவருக்கு 13 மற்றும் 14 ரன்கள் தேவை என்ற நிலையில் தான் களமிறங்குகிறார். அது எளிதான விஷயம் கிடையாது நாங்கள் குறிப்பாக போட்டியின் நடு வரிசையில் நிறைய விக்கெட்டுகள் இழந்தாலும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் ஒரு ஓவருக்கு ஏழு ரன்கள் தேவை என்ற நிலையில் களம் இறங்கி தோற்கவில்லை. எனவே அவர் 5வது இடத்தில் நன்றாகவே பேட்டிங் செய்தார்.
இதையும் படிங்க:ஐபிஎல் வரலாற்றில் முதல் கேப்டனாக.. சாதனை படைத்த ஸ்ரேயாஸ் ஐயர்.. இப்படி ஒரு சாதனை யாருமே செய்யல.. முழு விபரம்
வைபவ் அண்டர் 19 அமைப்பை போல தற்போது நிறைய கிரிக்கெட் விளையாடி வருகிறார். அவரைப் போலவே ரியான் பராக் இதே முறையில் விளையாடி வருகிறார். இந்த சர்வதேச கிரிக்கெட்டில் அவர்கள் சில காலங்களில் சிறப்பான வீரர்களாக மாறுவார்கள். குறிப்பாக பந்துவீச்சில் நாங்கள் 15 முதல் 20 ரன்கள் வரை அதிகமாக விட்டுக் கொடுக்கிறோம். மேலும் பேட்டிங்கில் இறுதிக்கட்டத்தில் எங்களால் பெரிய ஷாட்கள் அடிக்க முடியவில்லை என்பதும் எங்கள் தோல்விக்கு காரணமாகும். 195 முதல் 200 ரன்கள் வரை விட்டுக் கொடுக்க வேண்டிய இடத்தில் கூடுதலாக 20 ரன்கள் விட்டுக் கொடுப்பதுதான் பிரச்சனை. பேட்ஸ்மேன்களை மட்டும் குறை சொல்ல முடியாது. பந்துவீச்சாளர்களிடமும் பிரச்சனை உள்ளது எனவே அடுத்த சீசனில் அதனை கலைந்து சிறந்த அணியாக முன்னேற வேண்டும்” என அவர் பேசியிருக்கிறார்.






