ஐபிஎல் வரலாற்றில் முதல் கேப்டனாக.. சாதனை படைத்த ஸ்ரேயாஸ் ஐயர்.. இப்படி ஒரு சாதனை யாருமே செய்யல.. முழு விபரம்

0
252

நேற்று முதல் துவங்கிய 18வது ஐபிஎல் சீசனின் மீதமுள்ள போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது

இதன் மூலமாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக திகழும் ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு சிறப்பான சாதனையை படைத்திருக்கிறார்.

- Advertisement -

பிளே ஆப் சுற்றில் பஞ்சாப் கிங்ஸ்

18வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் திருவிழாவின் மீதமுள்ள போட்டிகள் கடந்த சனிக்கிழமை முதல் துவங்கப்பட்ட நிலையில் ஆர்சிபி மற்றும் கொல்கத்தா போட்டி கனமழையின் காரணமாக கைவிடப்பட்டது. அதற்குப் பின்னர் நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்ற நிலையில் முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி விளையாடின. இதில் முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக பஞ்சாப் அணியில் மிடில் வரிசை பேட்ஸ்மேன் நெகல் வதேரா 37 பந்துகளை எதிர் கொண்டு 5 பவுண்டரி மற்றும் 5 சிக்சர் என 70 ரன்கள் குவித்தார். அதற்குப் பிறகு இறுதிக் கட்டத்தில் சசாங்க் சிங் 30 பந்துகளை எதிர் கொண்டு 59 ரன்கள் குவித்தார். அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி களம் இறங்கியது. ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கின் போது கை விரலில் ஏற்பட்ட காயத்தால் களம் இறங்காத நிலையில் அவருக்கு பதிலாக சாங்க் சிங் அணியை வழிநடத்தினார். ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக ஹர்பிரித் பிரார் உள்ளே கொண்டுவரப்பட்டார்.

- Advertisement -

சாதனை படைத்த ஸ்ரேயாஸ் ஐயர்

இதில் ராஜஸ்தான் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததால் பஞ்சாப் அணி தனது 8வது வெற்றியை பதிவு செய்தது. மேலும் இரவு நடைபெற்ற குஜராத் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றதால் பஞ்சாப் கிங்ஸ் அணி 11 வருடங்களுக்குப் பிறகு பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்தது. 2014 ஆம் ஆண்டு பஞ்சாப் அணி கடைசியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சாய் சுதர்சன் கோலி ஸ்டைல் சதம்.. ஒரே போட்டியில் 3 டீம் ப்ளே ஆப் போனது.. குஜராத்தின் செம சம்பவம்

அது மட்டுமல்லாமல் ஒரு குறிப்பிடும்படியான முக்கிய சாதனையாக ஸ்ரேயாஸ் ஐயர் தலைமை வகிக்கும் பஞ்சாப் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியதன் மூலமாக அவர் கேப்டனாக தலைமை வகித்த மூன்று அணிகளையும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றிய முதல் கேப்டன் என்கிற வரலாற்றுச் சாதனையையும் படைத்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 2020 ஆம் ஆண்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு தலைமை தாங்கி இறுதிப் போட்டி வரை முன்னேற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பின்னர் 2024ஆம் ஆண்டு கொல்கத்தா அணிக்கு கேப்டனாக இருந்து ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்தார். இந்த முறையும் பஞ்சாப் அணியை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றி சாதனை படைத்திருக்கிறார்.

- Advertisement -