சிஎஸ்கே வருது.. நீங்களும் வாங்க.. சென்னை அணியை சுட்டிக்காட்டி.. ரசிகர்களை இழுக்க டிராவிட் புது ப்ளான்.. முழு விபரம்

0
180

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வருகிற மார்ச் மாதம் முதல் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில் மொத்தமாக 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்த சூழ்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தற்போது தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றிருக்கும் ராகுல் டிராவிட் இந்த சீசனில் ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

- Advertisement -

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா

18வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன் திருவிழா, இன்னும் சில வாரங்களில் இந்தியாவில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில் தலா 5 முறை சாம்பியன் பட்டங்களை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் 8 அணிகளும் இந்த தொடரில் பங்கு பெற உள்ளன. இதன் லீக் சுற்று முடிவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும். இந்த தொடரில் மற்றொரு வெற்றிகரமான அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளது.

சீசன் ஆரம்பித்த முதல் வருடம் ராஜஸ்தான் ராயல்ஸ் சாம்பியன் கோப்பையை கைப்பற்றிய நிலையில், அதற்குப் பின்னர் சில வருடங்களாகவே சாம்சன் தலைமையில் சிறப்பாக விளையாடி வெற்றிகளை பெற்று வருகிறது. கடந்த ஆண்டு வரை அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டுக் கொண்டிருந்த இலங்கை அணியின் முன்னாள் வீரர் சங்ககராவின் பதவிக்காலம் முடிந்த நிலையில், அவருக்கு பதிலாக இந்த ஆண்டு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக பொறுப்பேற்று இருக்கிறார்.

- Advertisement -

ரசிகர்களுக்கு டிராவிட் வேண்டுகோள்

மேலும் இந்திய அணியில் இருந்து கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையை வென்று கொடுத்த கையோடு இந்திய அணியில் இருந்து வெளியேறிய டிராவிட் தற்போது ராஜஸ்தான் அணிக்கு இந்த தொடரின் மூலமாக பயிற்சியாளராக பொறுப்பேற்று இருக்கிறார். இந்த சூழ்நிலையில் விளையாட்டை ஊக்குவிக்கவும், கொண்டாடவும் ரசிகர்கள் மைதானங்களின் இருக்கைகளை நிரப்ப வேண்டும் என்று வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க:இந்திய அணியால்.. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேர்மையே போச்சு.. எதிர்ப்பு குரல் எழுவது நியாயம்தான் – ஆஸி ஜான்சன் வெளிப்படை

இது குறித்து டிராவிட் கூறும் போது “சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வருகிறது, நீங்களும் வாருங்கள் மற்றவர்களையும், பார்வையிட வரவேற்கிறோம். விளையாட்டை விளம்பரப்படுத்துங்கள் இது ஒரு மகிழ்ச்சியான விஷயம். நீங்கள் ஒரு நல்ல போட்டியை காண்பீர்கள். நாங்களும் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறோம்” என்று டிராவிட் கூறி இருக்கிறார். அதாவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவு வரவேற்பு இருக்கும் நிலையில், அதனை சுட்டிக்காட்டி ரசிகர்கள் மைதானங்களில் நிரம்ப வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -