இந்திய அணியால்.. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேர்மையே போச்சு.. எதிர்ப்பு குரல் எழுவது நியாயம்தான் – ஆஸி ஜான்சன் வெளிப்படை

0
677

பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி தாங்கள் விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் விளையாடி வருகிறது. இதுவரை இந்திய அணி துபாயில் ஒரே மைதானத்தில் இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.

இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மிட்சல் ஜான்சன் இந்த தொடரானது நேர்மைத் தன்மையில் சற்று விலகி இருப்பதாக வெளிப்படையான கருத்துக்களை பேசி இருக்கிறார்.

- Advertisement -

சாம்பியன்ஸ் டிராபி தொடர்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தங்களது சொந்த மண்ணில் சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்த அனுமதி பெற்ற நிலையில் இந்திய அணி மட்டும் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட மறுத்தது. துபாயில் போட்டிகளை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஒப்புதலின் பேரில் போட்டிகள் மாற்றப்பட்டு இந்திய அணி அங்கு இரண்டு போட்டிகளை விளையாடியுள்ளது. பாகிஸ்தானில் ஒரு ஒரு போட்டியும் வேறு வேறு மைதானங்களில் விளையாடி வரும் நிலையில் இந்திய அணி மட்டும் தொடர்ந்து இரண்டு போட்டிகளை ஒரே மைதானத்தில் விளையாடி உள்ளது.

இது மற்ற அணிகளை விடவும் இந்திய அணிக்கு பெரிய சாதகமாக பார்க்கப்படும் நிலையில், இது போன்ற காரணங்களால் போட்டி நேர்மைத் தன்மை குறித்து சில கேள்விகள் எழுவதாக ஆஸ்திரேலியா முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஜான்சன், சில கேள்விகளை எழுப்பி இருக்கிறார். மேலும் இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சரியான முறையில் செயல்பட வேண்டும் எனவும் சில கருத்துக்களை பேசி இருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணிக்கு சலுகை

இதுகுறித்து ஜான்சன் விரிவாக கூறும்போது ” இந்த 2025 சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடர் நிறைய விவாதங்களை எழுப்பி இருக்கிறது. குறிப்பாக இந்திய அணி பாகிஸ்தானில் விளையாட மறுத்த நிலையில் துபாயில் விளையாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது பற்றி முழு போட்டியையும் ஒரே மைதானத்தில் விளையாட அனுமதி அளிக்கிறது. பாகிஸ்தானில் விளையாடுவது குறித்து இந்திய அணிக்கு வெளிப்படையான பாதுகாப்புக் கவலைகள் இருந்த போதிலும் இது மற்ற அணிகளுக்கு நியாயமற்றதாக தெரிகிறது என்றும், இது ஒரு நியாயமான வாதமாகும் என்று பல மதிப்புமிக்க குரல்கள் சுட்டிக்காட்டி உள்ளன.

இதையும் படிங்க:இந்திய கிரிக்கெட்டை மாற்றிய சம்பவம்.. தோனி வெறும் அரைநாள்ல அத முடிவு செஞ்சாரு – ஷிகர் தவான் பேட்டி

இந்தியா தொடர்பான விஷயங்களை கையாளும் விதத்திற்காக நிர்வாக குழு விமர்சனங்களை சந்திப்பது இது முதல் முறை அல்ல, மேலும் இது போட்டியின் ஒட்டுமொத்த நேர்மை குறித்த கேள்வி எழுப்புகிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -