தோத்தது கஷ்டமா இல்ல.. ஆனா இந்த விஷயம்தான் ரொம்ப கஷ்டமா இருக்கு – சஞ்சு சாம்சன் பேச்சு

0
4320
Sanju

இன்று ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. மிகவும் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடந்த இந்த போட்டியில் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் டாசில் தோற்று பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ரியான் பராக் 48 பந்தில் 76 ரன்கள், கேப்டன் சஞ்சு சாம்சன் 36 பந்தில் 68 ரன்கள் எடுத்தார்கள். 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 193 ரன்கள் சேர்த்தது.

- Advertisement -

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டன் கில் மட்டும் நிலைத்து நின்று விளையாடி 44 பந்துகளில் 72 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்து மற்ற பேட்ஸ்மேன்கள் மேல் வரிசையில் இருந்து பெரிய ஒத்துழைப்பு எதையும் கொடுக்கவில்லை. இதனால் இந்த போட்டியில் குஜராத் அணி ஜெயிப்பது சந்தேகம் என்பதான சூழ்நிலை நிலவியது.

குஜராத் அணிக்கு கடைசி மூன்று ஓவர்களில் வெற்றிக்கு 42 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நேரத்தில் ஜோடி சேர்ந்த ரஷீத் கான் மற்றும் ராகுல் திவாட்டியா மிக அருமையாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்து வந்தார்கள். ராகுல் திவாட்டியா 22 (11), ரஷீத் கான் 24* (11) ரன்கள் எடுத்தார்கள். குஜராத் அணி மூன்றாவது வெற்றி பெற்றது.

தோல்விக்குப் பிறகு பேசிய கேப்டன் சஞ்சு சாம்சன் “ஆட்டத்தின் கடைசிப் பந்தை விட, தோல்வியடைந்த கேப்டனாக இங்கு வந்து எந்த இடத்தில் தவறு செய்தோம் எப்படி தோற்றோம் என்பது பேசுவதுதான் மிகவும் கஷ்டமான ஒன்றாக இருக்கிறது. கொஞ்ச நேரம் கொடுத்தால் தெளிவாக சொல்வேன். குஜராத் டைட்டன்ஸ் அணி அவர்கள் செயல்பட்ட விதத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும். நான் பேட்டிங் செய்யும்பொழுது 180 ரன்கள் எடுத்தால் நல்ல ஸ்கோர் ஆக இருக்கும் என்று நினைத்தேன். 197 ரன்கள் இலக்கு என்ற போது வெற்றி பெற முடியும் என்று நம்பினேன்.

- Advertisement -

இதையும் படிங்க : கடைசி 2 ஓவர் 35 ரன்.. ரஷித் கான் பேட்டிங்கில் காட்டிய மேஜிக்.. குஜராத் டைட்டன்ஸ் ராஜஸ்தான் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது

இன்று விக்கெட் நல்ல ட்ரையாக இருந்தது மேலும் பனிப்பொழிவு இல்லை. இந்த பவுலிங் யூனிட் இந்த போட்டியில் எங்களை வெற்றி பெற செய்திருக்க வேண்டும். எங்கள் இன்னிங்சின் தொடக்கத்தில் நாங்கள் அதிரடியாக செல்வது கடினம். நாங்கள் சிறப்பாகவே எங்கள் இன்னிங்ஸை விளையாடினோம். இந்த மைதானத்தில் பனி இல்லை என்றால் 197 ரன்களை எப்பொழுதும் நம்பலாம்” என்று கூறியிருக்கிறார்.