15.3 ஓவர்.. மும்பை இந்தியன்ஸை புரட்டி எடுத்த ராஜஸ்தான்.. புள்ளி பட்டியலில் ட்விஸ்ட்

0
621
IPL2024

இன்று ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல் அணிகள் மோதிக்கொண்ட போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இன்றைய போட்டிக்கான டாஸில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்து வீசியது.

முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்திருந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சொந்த மைதானத்திலும் எடுத்ததும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் ரோகித் சர்மா, நமன் திர் மற்றும் டிவால்ட் பிரிவியஸ் என மூன்று பேட்ஸ்மேன்கள் டிரெண்ட் போல்ட் பந்துவீச்சில் கோல்டன் டக் ஆகி வெளியேறினார்கள். இஷான் கிஷான் 16 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க அந்த நேரத்தில் 20 ரன்களுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி நான்கு முக்கிய விக்கெட்டுகளை இழந்தது.

- Advertisement -

இதைத்தொடர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் ஹர்திக் பாண்டியா 34 (21), திலக் வர்மா 34 (21) ரன்கள் என குறிப்பிடும்படி விளையாடினார்கள். இவர்களுக்கு அடுத்து டிம் டேவிட் 24 பந்தில் 17 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சாகல் 4 ஓவர்களில் 11 ரன்கள் மட்டும் விட்டு தந்து மூன்று விக்கெட்டுகள், போல்ட் நான்கு ஓவர்களுக்கு 22 ரன்கள் விட்டுத் தந்து மூன்று விக்கெட்டுகள், பர்கர் நான்கு ஓவர்களுக்கு 32 ரன்கள் தந்து இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

இதைத் தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஜெய்ஸ்வால் 10 (6), ஜோஸ் பட்லர் 16 (13), ரவிச்சந்திரன் அஸ்வின் 16 (16) ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். ஒரு முனையில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் இளம் வீரர் ரியான் பராக் 39 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன், ஆட்டம் இழக்காமல் 54 ரன்கள், சுபம் துபே 8* (6) ரன்கள் எடுக்க, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15.3 ஓவர்களில், நான்கு விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை இந்தியன்ஸ் தரப்பில் ஆகாஷ் மதுவால் நான்கு அவர்களுக்கு 20 ரன்கள் தந்து மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதையும் படிங்க: 3 கோல்டன் டக்.. ரோகித் சாகல் செய்த வித்தியாசமான சாதனை.. ராஜஸ்தானிடம் சுருண்டது மும்பை இந்தியன்ஸ்

மூன்றாவது போட்டியில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இது மூன்றாவது தோல்வியாக அமைந்திருக்கிறது. மூன்றாவது போட்டியில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இது மூன்றாவது வெற்றியாக அமைந்திருக்கிறது. மேலும் ராஜஸ்தான் ராயல் அணி புள்ளி பட்டியலில் கே கே ஆர் அணியை கீழே இறக்கி முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் சிஎஸ்கே மற்றும் குஜராத் அணிகள் இருக்கின்றன.