36 பந்து 96 ரன்.. பட்டையை கிளப்பிய பட்லர்.. ரன் சேஸ் மெகா சாதனை.. ராஜஸ்தான் கேகேஆர் அணியை வென்றது

0
457
Buttler

இன்று ஐபிஎல் தொடரில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. பரபரப்பான இந்த போட்டியில் தனி ஆளாக விளையாடி ராஜஸ்தான் அணியை ஜோஸ் பட்லர் வெல்ல வைத்தார்.

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீச முடிவு செய்தது. கொல்கத்தா அணிக்கு பில் சால்ட் 10(13), ரகுவன்சி 30(18), ஸ்ரேயாஸ் ஐயர் 11(7), ரசல் 13(10) என்று வரிசையாக வெளியேறினார்கள். ஆனால் ஒரு முனையில் துவக்க ஆட்டக்காரர் சுனில் நரைன் நிலைத்து நின்று விளையாடினார்.

- Advertisement -

சிறப்பாக விளையாடிய சுனில் நரை 49 பந்துகளில் சதத்தை நிறைவு செய்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் 56 பந்துகளில் 13 பவுண்டரிகள் 6 சிக்ஸர்களுடன் 109 ரன்கள் குவித்தார்.கடைசி கட்டத்தில் ரிங்கு சிங் அதிரடியாக விளையாடி ஒன்பது பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உடன் 20 ரன்கள் எடுத்தார்.

கொல்கத்தா அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தரப்பில் வேகப்பந்துவீச்சாளர்கள் குல்தீப் சென் மற்றும் ஆவேஷ் கான் இருவரும் இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள். நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து பெரிய ரன்கள் வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல் அணிக்கு ஜெய்ஸ்வால் 19(9), சஞ்சு சாம்சன் 12(8), ரியான் பராக் 34(14), துருவ் ஜுரல் 2(4), அஸ்வின் 8 (11), சிம்ரன் ஹெட்மயர் 0(1), ரோமன் பவல் 26(13) ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். ஒரு முனையில் விக்கெட் சரிய ஜோஸ் பட்லர் சிறப்பாக விளையாடினார். இந்த நிலையில் கடைசி மூன்று ஓவர்களுக்கு 46 ரன்கள் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு தேவைப்பட்டது.

- Advertisement -

ஜோஸ் பட்லர் மேஜிக்

இந்த நிலையில் மிட்சல் ஸ்டார்க்கின் 18வது ஓவரில் 18 ரன்கள் வந்தது. ஹர்ஷித் ரானாவின் 19வது ஓவரில் 19 ரன்கள் வந்தது. இதற்கு அடுத்து ராஜஸ்தான் வெற்றிக்கு கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை தமிழகத்தின் வருண் சக்கரவர்த்தி வீசினார். கடைசி ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் அடித்த பட்லர், அடுத்த மூன்று பந்துகளில் ரன்கள் எடுக்க முடியவில்லை. இரண்டு பந்தில் மூன்று ரன் தேவைப்பட, ஐந்தாவது பந்தில் இரண்டு ரன் எடுத்தார். இந்த நிலையில் கடைசிப் பந்தில் ஒரு ரன்னுக்கு பவுண்டரி அடித்து ராஜஸ்தான் அணியை திரில் வெற்றி பெற வைத்தார். ஜோஸ் பட்லர் 60 பந்துகள் சந்தித்து ஒன்பது பவுண்டரி மற்றும் ஆறு சிக்ஸர்களுடன் ஆட்டம் இழக்காமல் 107 ரன்கள் குவித்தார்.

இதையும் படிங்க : 17 வருடம்.. ஈடன் கார்டனில் சுனில் நரைன் அதிரடி சதம்.. முதல் கேகேஆர் வீரராக சிறப்பு சாதனை

ராஜஸ்தான் 224 ரன்கள் சேஸ் செய்து ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ரன் சேஸ் சாதனையை படைத்திருக்கிறது. ஜோஸ் பட்லர் ரன் சேஸில் மூன்று முறை ஐபிஎல் தொடரில் சதம் அடித்திருக்கிற ஒரே பேட்ஸ்மேனாக சாதனை படைத்திருக்கிறார். மேலும் இது அவருக்கு ஏழாவது ஐபிஎல் சதம் என்பது குறிப்பிடத்தக்கது. எட்டு ஐபிஎல் சதங்களுடன் விராட் கோலி முதலிடத்திலும், ஆறு ஐபிஎல் சதங்களுடன் கெயில் மூன்றாம் இடத்திலும் இருக்கிறார்கள்.