17 வருடம்.. ஈடன் கார்டனில் சுனில் நரைன் அதிரடி சதம்.. முதல் கேகேஆர் வீரராக சிறப்பு சாதனை

0
159
IPL2024

நடப்பு ஐபிஎல் 17ஆவது சீசனின் 31ஆவது போட்டியில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி தற்பொழுது நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த போட்டியில் கொல்கத்தா வீரர் சுனில் நரைன் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இந்தப் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். கொல்கத்தா அணியின் துவக்க ஆட்டக்காரர் பில் சால்ட் 13 பந்துகளில் 10 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து சுனில் நரைன் உடன் இளம் வீரர் ரகுவன்சி ஜோடி சேர்ந்து 43 பந்துகளில் 85 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.

- Advertisement -

இறுதியில் ரகுவன்சி 18 பந்துகளில் 5 பவுண்டரிகள் உடன் 30 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 7 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதற்கு அடுத்து அதிரடி வீரர் ஆண்ட்ரே ரசலை முன்கூட்டியே உள்ளே அனுப்பி வைத்தார்கள். அவர் 10 பந்தில் 13 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இந்த நிலையில் ஒரு முனையில் நின்று மிகச் சிறப்பான முறையில் பேட்டிங் செய்த சுனில் நரைன் டி 20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 49 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் உடன் தனது சதத்தை அடித்தார். முடிவில் 56 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 109 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இறுதிக்கட்டத்தில் ரிங்கு சிங் 9 பந்துகளில் 20 ரன்கள் எடுக்க, கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணியின் தரப்பில் ஆவேஸ் கான் மற்றும் குல்தீப் சென் இருவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : மும்பைக்கு எதிரா தோனி அடித்த 4 பந்துகள்.. அப்ப களத்தில் இதுதான் நடந்தது – சிவம் துபே பேட்டி

மேலும் கொல்கத்தா அணியின் சொந்த மைதானமான ஈடன் கார்டன் மைதானத்தில் முதல் சதம் அடித்த கொல்கத்தா வீரர் என்கின்ற சாதனையை சுனில் நரைன் படைத்திருக்கிறார். மேலும் 500 டி20 போட்டிகளுக்கு மேல் விளையாடி தன்னுடைய முதல் சதத்தையும் இந்த வடிவத்தில் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.