தொடரும் இந்திய அணியின் தோல்வி ; ராகுல் டிராவிட் உடனடியாக இதைச் செய்ய வேண்டும் – அறிவுரை வழங்கும் ஜாகீர் கான்

0
146
Rahul Dravid and Zaheer Khan

தென் ஆப்பிரிக்க அணி ஐந்து டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது. டெல்லியில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்திய அணி தோற்று இருக்க, நேற்று ஒடிஷாவின் கட்டாக்க பராபதி மைதானத்தில் இரண்டாவது போட்டி நடந்தது!

இந்த ஆட்டத்திலும் டாஸில் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார். ரீஸா ஹென்ரிக்ஸ், ஹென்றி கிளாஸன் உள்ளே வர, குயின்டன் டிகாக், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வெளியே வைக்கப்பட்டிருந்தார்கள். இந்திய அணியில் எந்த மாற்றங்களும் இல்லை.

- Advertisement -

முதல் ஒவரில் ரபாடா பந்துவீச்சில் ருதுராஜ் வெளியேற, அதைத் தொடர்ந்து சரியான நேரத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் வெளியேறிக்கொண்டே இருந்தார்கள். இறுதியில் இருபது ஓவர் முடிவில் இந்திய அணி 148 ரன்கள் சேர்த்தது.

அடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியின் முதல் மூன்று விக்கெட்டுகளை புவனேஷ்வர் குமார் கைப்பற்றினார். ஆனால் அதற்கடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் டெம்பா பவுமா, ஹென்றி கிளாசன் ஜோடி 64 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்தும், ஹென்றி கிளாசன் 46 பந்தில் 81 ரன்கள் குவித்தார். சாஹல்-அக்சர் இருவரும் ஐந்து ஓவரில் 68 ரன்களை விட்டுக்கொடுத்தார்கள். தென் ஆப்பிரிக்க அணி 18.2 ஓவரில் எளிதாய் வென்றது.

இந்திய அணியின் இந்த தோல்விகள் குறித்து, இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கருத்து தெரிவித்திருக்கிறார், அதில் “தென் ஆப்பிரிக்க அணி ஆட்டத்தில் பார்ட்னர்ஷிப் அமைக்கும் போது இந்திய வீரர்களின் உற்சாகம் வடிந்துபோய் விடுகிறது. அவர்கள் அழுத்தத்தில் விழுந்துவிடுகிறார்கள். இது களத்தில் தெளிவாகத் தெரிந்தது” என்றார்.

- Advertisement -

மேலும் கூறிய அவர் “முதல் ஆட்டத்திலும், இந்த ஆட்டத்திலும் இந்தியாவின் கைகளில்தான் ஆட்டம் இருப்பதுபோல் தெரிந்தது. ஆனால் தென்ஆப்பிரிக்க அணி பார்ட்னர்ஷிப் அமைக்கும் போது எல்லாம் மாறிவிடுகிறது. அடுத்த போட்டி துவங்க இடையில் ஒருநாளே உள்ளது. பயிற்சியாளர் டிராவிட் மீண்டும் அணியினரை ஒருங்கிணைத்து, அவர்கள் மீண்டுவர, நம்பிக்கை பெற ஒரு உரையாடலை நடத்த வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.