2024 உலக கோப்பை ஜெயிக்க ரோஹித் தான் காரணம்.. அந்த பிளான அவர்தான் செஞ்சார் – ராகுல் டிராவிட் பேச்சு

0
69
Dravid

2024 டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வெல்ல ரோகித் சர்மாவின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்ததாக, அப்போதைய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியிருக்கிறார்.

இந்திய அணி கடைசியாக 2011 ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனி தலைமையில் இந்தியாவில் நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை கைப்பற்றிய இருந்தது. அதற்கு அடுத்து 13 ஆண்டுகளாக இந்திய அணி எந்த வடிவத்திலும் உலகக் கோப்பையை வெல்லவில்லை.

- Advertisement -

மாற்றிய ரோகித் சர்மா

இது குறித்து அப்போதைய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசும் பொழுது “நான் இந்திய அணிக்குள் பயிற்சியாளராக வந்ததில் இருந்து தொடர்ந்து ரோகித் சர்மா உடன் விவாதங்கள் இருந்து வந்தது. நாங்கள் இன்னும் ஆக்ரோஷமான கிரிக்கெட்டை விளையாட விரும்பினோம். ஆரம்பத்தில் இருந்து அதற்கு நாங்கள் முயற்சி செய்தோம். ஏனென்றால் டி20 கிரிக்கெட் அப்படித்தான் உருவாகி வந்தது என்பதை நாங்கள் பார்த்தோம். இதை மாற்றியதில் ரோகித் சர்மா மிகப்பெரிய பாராட்டுக்குரியவர்”

“இந்திய அணியை ஒரு குறிப்பிட்ட திசையில் நகர்த்த, தொடர்ந்து எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஆக்ரோஷமான முறையில் விளையாட, அந்தப் பாதையில் இப்பொழுதும் இந்திய அணி தொடர்ந்து சென்று கொண்டிருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்”

- Advertisement -

இதுதான் கடினமாக இருந்தது

“வீரர்களை தேர்வு செய்ய முடியாத பொழுது, ஏன் அவர்களை நீக்க வேண்டி இருந்தது என்றும் ஏன் சிலருடன் தொடர்ந்து விளையாட வேண்டி இருந்தது என்றும் அவர்களுக்கு எடுத்துச் சொல்வது தொடர்பு கொள்வது மிகவும் கடினமாக இருந்தது. ஏனென்றால் சொல்லக்கூடிய கருத்துக்களில் அவர்கள் உடன்பட மாட்டார்கள்”

இதையும் படிங்க: அபிஷேக் ட்ரைலர் காட்டிட்டார்.. இனி முழு படமும் இப்படித்தான் இருக்கும்.. கில்லுக்கும் வசதி – பார்த்திவ் படேல் பேச்சு

“ஆனாலும் நீங்கள் அவர்களை தொடர்பு கொண்டு சொல்லி புரிய வைக்க வேண்டியது வேலையின் ஒரு பகுதிதான். மேலும் சில வீரர்களை நீங்கள் நீக்கும் பொழுது அதற்கான சரியான காரணங்கள் கூட உங்களிடம் இருக்காது. ஏனென்றால் அவர்கள் சிறந்தவர்களாக இருப்பார்கள். ஆனால் அவர்களை தேர்வு செய்ய முடியாத நிலை இருக்கும். எனவே இதுதான் கடினமாக இருந்தது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -