அபிஷேக் ட்ரைலர் காட்டிட்டார்.. இனி முழு படமும் இப்படித்தான் இருக்கும்.. கில்லுக்கும் வசதி – பார்த்திவ் படேல் பேச்சு

0
38
Abhishek

அபிஷேக் ஷர்மா இனி எந்த நாடாக இருந்தாலும் எப்படி விளையாடப் போகிறார் என்பதற்கான ட்ரெய்லரை நேற்று காட்டிவிட்டதாக பார்த்திவ் படேல் கூறியிருக்கிறார்.

நேற்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் போட்டியில் 15 பந்தில் 19 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து இருந்தாலும் அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடுவதை மட்டுமே நோக்கமாக வைத்திருந்தார். முதல் பந்தையே இறங்கி வந்து விளையாட முயற்சி செய்தார்.

- Advertisement -

அபிஷேக் ஷர்மாவின் ட்ரெய்லர்

இந்த நிலையில் அபிஷேக் ஷர்மா இனி எப்படி விளையாட போகிறார்? அவர் தற்போது அடைந்திருக்கும் உயரத்தை எதன் காரணமாக அடைந்தார்? தன்னுடைய பேட்டி அணுகு முறையில் ஏதாவது மாற்றத்தை செய்வாரா? என்பது குறித்து பார்த்திவ் படேல் அலசி இருக்கிறார்.

இது குறித்து பார்த்திவ் படேல் பேசும் பொழுது “இனி படம் எப்படி இருக்க போகிறது என்பதற்கான ட்ரெய்லர் நேற்று வெளியானது. அபிஷேக் இனி இந்த மாதிரியான அதிரடி அணுகுமுறை உடன்தான் விளையாடப் போகிறார் என்று தெரிந்துவிட்டது. மேலும் அவர் இப்படி விளையாடி தான் டி20 ரேங்க் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். அதிரடியாக விளையாடும் பொழுது அவர் நிலைத்தன்மை உடனும் இருக்கிறார்”

- Advertisement -

அபிஷேக்கிடம் பார்க்க முடியாது

“நீங்கள் ஒரு புதிய நாட்டிற்கு சென்று விளையாடும் பொழுது அங்குள்ள ஆடுகளத்தன்மைக்கு நீங்கள் அட்ஜஸ்ட் ஆக டைம் எடுக்கும். ஆனால் அபிஷேக் ஷர்மா ஆஸ்திரேலிய கண்டிஷனில் எந்தவித தயக்கமும் இல்லாமல் எடுத்ததும் அதிரடியாக விளையாடினார். இனி அவர் தற்காப்பு ஆட்டம் ஆடி ஆட்டம் இழப்பதை நீங்கள் ஒரு நாளும் பார்க்க மாட்டீர்கள்”

இதையும் படிங்க : கம்பீர் சாம்சனை 11வது இடத்துக்கும் அனுப்புவார்.. ஆனா சிஎஸ்கே பையனை மட்டும் விட மாட்டார் – ஸ்ரீகாந்த் பேச்சு

“முதலில் கில் உடன் அவர் களம் இறங்குகிறார். கில் எடுத்ததும் அவர் விளையாடுவதற்கு பந்துகளை கொடுத்து தன்னை செட்டில் செய்து கொள்கிறார். அபிஷேக் அதிரடியாக விளையாடுவதால் கில்லுக்கு எந்த அழுத்தமும் ஏற்படுவதில்லை. இது கில் விளையாடும் முறைக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது. எனவே இது ஒரு நல்ல கூட்டணி” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -