கம்பீர் கனவெல்லாம் பலிக்காது.. இந்திய கிரிக்கெட்டுக்கு ஹீரோஸ் தேவை.. அதுக்கு காரணம் இருக்கு – டிராவிட் அதிரடி

0
223
Dravid

இந்திய முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் எந்த ஒரு விளையாட்டுக்கும் ஹீரோக்கள் மிகவும் தேவை என்று கூறியிருக்கிறார்.

இவரது இந்த கருத்து இந்திய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கருத்துக்கு எதிரானதாக அமைந்திருப்பதால் இது பரபரப்பான செய்தியாக மாறி உள்ளது.

- Advertisement -

கம்பீர் கருத்து

இந்திய கிரிக்கெட்டில் தனிநபர் வழிபாட்டை ஒழிக்க வேண்டும் என கம்பீர் தொடர்ந்து பேசி வருகிறார். குறிப்பாக இந்தியாவில் விளையாட்டு, சினிமா, அரசியல் என எல்லா பக்கத்திலும் தனிநபரை கடவுள் போல கொண்டாடுவது சரியானது இல்லை என்று கூறி வருகிறார்.

மேலும் இங்கு அணியே முக்கியம் தனிப்பட்ட வீரர்களுக்கு கிடையாது என்பது அவருடைய கருத்தாக இருக்கிறது. அவர் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு வந்த பிறகு சில வடிவங்களில் இருந்து முன்னணி வீரர்கள் பலர் ஓய்வு பெற்றுள்ளார்கள். மேலும் கேப்டன்களின் விளையாட்டான கிரிக்கெட்டை பயிற்சியாளரின் விளையாட்டாக மாற்றிக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

ஹீரோக்கள் அவசியம்

இதுகுறித்து ராகுல் டிராவிட் பேசும்போது “எந்த ஒரு விளையாட்டு இருக்கும் அதன் ஹீரோக்கள் தேவை. நீங்கள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தாவிட்டால் நீங்கள் ஹீரோவாக முடியாது. நீங்கள் சிறப்பாக விளையாடாவிட்டால் ஒரு நாட்டின் ரசிகர்களை கவர முடியாது. இந்தியாவில் சாதனைகளுக்கு மரியாதை கிடைக்கும். அதே சமயத்தில் விமர்சனமும் இருக்கும்”

இதையும் படிங்க : கார்த்திக் சர்மா என்னை மன்னிச்சிடு.. உன்ன பத்தி தப்பா சொல்லிட்டேன்.. இப்ப வாபஸ் வாங்கிக்கிறேன் – ஸ்ரீகாந்த் பேச்சு

“ரசிகர்கள் உங்களைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டே இருப்பார்கள் அதனால் ஆய்வும் விமர்சனமும் இருந்து கொண்டே இருக்கும். எனவே இந்தியாவில் ஒரு லெஜெண்ட் இல்லை ஹீரோவாக வேண்டும் என்றால் நீங்கள் சரியான விஷயங்களை தொடர்ந்து சரியாக செய்து கொண்டே இருக்க வேண்டும். அதே சமயத்தில் உங்கள் செயல்பாட்டால் அணி வெற்றி பெற்று இருக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -