கார்த்திக் சர்மா என்னை மன்னிச்சிடு.. உன்ன பத்தி தப்பா சொல்லிட்டேன்.. இப்ப வாபஸ் வாங்கிக்கிறேன் – ஸ்ரீகாந்த் பேச்சு

0
161
Srikanth

நேற்று லக்னோ மணிக்கு எதிரான போட்டியில் கார்த்திக் சர்மா தான் நினைத்ததை மாற்றி சிறப்பாக விளையாடி இருக்கிறார் என ஸ்ரீகாந்த் கூறியிருக்கிறார்.

இந்த போட்டியில் அதிரடியாக ஆடிய கார்த்திக் சர்மா 71 ரன்கள் குவித்தார். முக்கியமாக ஸ்பின்னர்களை அவர் மிகவும் சிறப்பாக எதிர் கொண்டு ரன்கள் எடுத்தார். அவர் விளையாடிய வகையில் சிஎஸ்கே 200 ரன்கள் தாண்டி எடுக்கும் என்ற நிலையில் இருந்தது.

- Advertisement -

முடிவை மாற்றிக் கொள்கிறேன்

இந்த போட்டிக்கு முன்பாக வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள தெரியாத கார்த்திக் சர்மா நான்காவது இடத்தில் விளையாட கூடாது முடிந்தால் அவர் போட்டியில் விளையாடாமல் இருக்க வேண்டும் என்று ஸ்ரீகாந்த் கூறியிருந்தார்.

தற்போது இது குறித்து பேசி உள்ள ஸ்ரீகாந்த் ” நான் கார்த்திக் சர்மாவின் ஆதரவாளன் கிடையாது. ஆனால் அவர் நேற்று சிறப்பாக ஆடினார். பிரின்ஸ் யாதவ் அபாயமானவர் என்று அவரை முதலில் தள்ளிவிட்டு மெதுவாக ஆடினார். இதற்குப் பிறகு அடிக்க வேண்டியவர்களை அடித்து சிறப்பாக கொண்டு வந்தார். அவர் எந்த போட்டியில் விளையாடியிருக்கவே கூடாது என்று நினைத்தேன். அவர் என் முடிவை மாற்றிவிட்டார்”

- Advertisement -

இதைக் கற்றுக் கொள்ள வேண்டும்

“அவரிடம் தற்போது இருக்கும் ஒரு பிரச்சனை என்னவென்றால் அவர் ஒரு சிக்ஸர் இல்லை பவுண்டரி அடித்தால் உடனடியாக ஒரு சிங்கிள் எடுத்து எதிர்முனையில் இருப்பவருக்கு விளையாடுவதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்”

இதையும் படிங்க: மும்பை செய்த உதவியை சிஎஸ்கே வீணடிச்சிருக்கு.. பிளமிங் தொடர்ந்து மோசமான தப்பையே பண்றாரு – பத்ரிநாத் விமர்சனம்

“நேற்று அவர் இந்த முறையில் ஆடி பிரிவிஸ் விளையாடுவதற்கு வாய்ப்பு கொடுத்து இருக்க வேண்டும். ஆனால் அவர் சிக்ஸர் அடித்த பிறகு நிறைய டாட் பந்துகள் விளையாடுகிறார். இதனால் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் மற்றும் இல்லாமல் அணியின் ரன் ரேட்டும் குறைந்து விடுகிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -