அவசரமாக பெங்களூர் திரும்பிய ராகுல் டிராவிட்!-நடந்தது என்ன?

0
1884

இலங்கை அணியானது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் ஒரு நாள் போட்டி தொடர்களில் ஆடி வருகிறது . டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்த இலங்கை அணி ஒரு நாள் போட்டி தொடரையும் 2-0 என்ற கணக்கில் இழந்தது . இரண்டு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் நாளை மறுநாள் நடைபெற இருக்கிறது .

நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் ஆடிய இலங்கை 215 ரன்கள் ஆல் அவுட் ஆனது . அதனைத் தொடர்ந்து ஆடிய இந்திய அணி கேஎல் ராகுலின் பொறுப்பான ஆட்டத்தால் நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒரு நாள் போட்டி தொடரை 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் .

- Advertisement -

மூன்றாவது ஒரு நாள் போட்டிக்காக இரு அணி வீரர்களும் இன்று காலை திருவனந்தபுரம் சென்றனர். ஆனால் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அவர்களுடன் செல்லவில்லை . அவர் ஏன் இந்திய அணியுடன் திருவனந்தபுரம் செல்லவில்லை என்பதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது .

ராகுல் டிராவிட் தனது உடல் நிலையை பரிசோதிப்பதற்காக இன்று அதிகாலையே கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் சென்றதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது . இரண்டாவது போட்டியின் போது அவருக்கு உயர் ரத்த அழுத்த பிரச்சனை இருந்துள்ளதாக தெரிகிறது .

இதனை அடுத்து அவரை பரிசோதித்த பெங்கால் கிரிக்கெட் சங்க மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.தற்போது அவர் நலமுடன் உள்ளார். பெங்களூர் சென்று மருத்துவ பரிசோதனைகளை முடித்துவிட்டு சனிக்கிழமை அவர் இந்திய அணியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ராகுல் டிராவிட்டின் மனைவியும் ஒரு மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது .

- Advertisement -

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிசிசிஐ ராகுல் டிராவிட் நலமுடன் இருக்கிறார் அவர் மருத்துவ பரிசோதனைக்காக மட்டுமே பெங்களூர் செல்கிறார் மேலும் இந்திய அணி உடன் அவர் நாளை இணைவார் என்று தெரிவித்துள்ளது . ராகுல் டிராவிட் தவிர மற்ற பயிற்சியாளர்கள் இந்திய அணியுடன் இணைந்து திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றனர் .

இலங்கை அணியின் சுற்றுப்பயணத்திற்கு பிறகு நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது அந்த அணியும் மூன்று டி20 மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளை கொண்ட தொடர்களில் பங்கேற்பதற்காக இந்தியா வருகிறது . இந்தத் தொடருக்கான இந்திய அணி திங்கள் கிழமை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .