ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு பின்னடைவு.. மெயின் தலக்கு கொரோனா தொற்று

0
41

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 27ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்காக அனைத்து அணியினரும் தயாராகிக் கொண்டிருக்கிற நிலையில் இந்தியாவுக்கு மட்டும் ஒரு அதிர்ச்சி செய்தி வந்துள்ளது. இந்திய அணி இன்று துபாய்க்கு புறப்பட்டுச் செல்ல உள்ளது. புறப்படுவதற்கு முன் நடத்தப்படும் கொரோனா பரிசோதனையில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆன ராகுல் டிராவிட்டுக்கு தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

- Advertisement -

இதனை அடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதனால் ஆசிய கோப்பைக்குச் செல்லும் இந்திய அணில் ராகுல் டிராவிட் இடம்பெற மாட்டார் என்ற முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. ஏனெனில் டி20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் தொடங்கும் நிலையில் அதற்கான பயிற்சி களமாக ஆசிய கோப்பைத் தொடர் இருக்கும் என கருதப்பட்டது.

ஆசிய கோப்பை தொடரில் யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ அவர்களுக்கு தான் டி20 உலக கோப்பையில் இடம் கிடைக்கும். இதனால் எந்த வீரர்களை எந்த இடத்தில் பயன்படுத்துவது? யாருக்கு எந்த பொறுப்பு வழங்குவது என்பது குறித்து டிராவிட் மற்றும் ரோகித் சர்மா கலந்து ஆலோசித்து ஆசிய கோப்பை தொடரில் அதற்கான வழிமுறைகளை வகுத்து நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது கொரோனாவால் டிராவிட் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்தியாவின் பிளான் சொதப்பலாகிவிட்டது. இது ஆசிய கோப்பை தொடரிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. ஏனெனில் பாகிஸ்தான் போன்ற பலம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர்களை எப்படி எதிர்கொள்வது என்பது டிராவிட் போன்ற சிறந்த வீரர்களுக்கு நன்கு தெரியும்.

- Advertisement -

வேகப்பந்து வீச்சை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்தும், சுழல் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் எப்படி விளையாடுவது என்பது குறித்தும் டிராவிட் வீரர்களுக்கு எடுத்துக் கூறியிருப்பார். தற்போது அந்த வாய்ப்பு இந்திய வீர்களுக்கு கிடைக்காமல் போய்விட்டது. இந்த நிலையில் ராகுல் டிராவிட்டுக்கு பதிலாக ஜிம்பாப்வே தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்ட விவிஎஸ் லக்ஷ்மன் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி வழி நடத்துவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.