நேற்று டிஎன்பிஎல் தொடரில் லைக்கா கோவை கிங்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் இறுதிப் போட்டியில் மோதிக்கொண்டன. இந்த போட்டிக்கு சிறப்பு விருந்தினராக இந்திய முன்னாள் வீரர் மற்றும் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வந்திருந்தார். மேலும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்களுக்கு மத்தியில் விளையாடிய தன்னுடைய பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
நேற்று நடைபெற்ற டி என் பி எல் இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லைக்கா கோவை கிங்ஸ் அணி எதிர்பார்ப்புக்கு மாறாக சுமாராகவே விளையாடியது. ரவிச்சந்திரன் அஸ்வின் வருண் சக்கரவர்த்தி என இரண்டு அனுபவ வீரர்களும் அந்த அணியை கட்டிப் போட்டார்கள். இறுதியில் அந்த அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதைத்தொடர்ந்து விளையாடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டிங்கில் மிகச் சிறப்பாக செயல்பட்டு 46 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். இதைத்தொடர்ந்து திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 18.2 ஓவரில் நான்கு விக்கெட் இழப்புக்கு இலக்க எட்டி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.
இந்த இறுதி போட்டிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த ராகுல் டிராவிட் பேசும் பொழுது “எனக்கு இந்த மைதானத்தில் சில சிறப்பான நினைவுகள் இருக்கிறது. குறிப்பாக நான் இங்கு நிறைய லீக் கிரிக்கெட் விளையாடிய நினைவுகள் இருக்கிறது. இங்கு பழைய நாட்களில் லீக் கிரிக்கெட் விளையாடியது மற்றும் இங்கு வளர்ந்தது எல்லாம் நினைவில் உள்ளது. அப்போது எல்லா ஸ்டாண்டுகளும் கான்கிரீட்டில் இருக்கும். தற்போது எல்லாம் மாறி இருக்கிறது. இங்கு லீக் கிரிக்கெட் விளையாடுவது எப்பொழுதும் அருமையாக இருந்திருக்கிறது.
நிச்சயமாக இங்கு நான் நிறைய சர்வதேச கிரிக்கெட்டும் விளையாடியிருக்கிறேன். மேலும் இந்த ரசிகர் கூட்டத்திற்கு முன்னால் கிரிக்கெட் விளையாடுவது மிகவும் சிறந்தது. ஏனென்றால் இந்தியாவில் சென்னை ரசிகர்கள் மிகவும் பாராட்டக்கூடிய ஆதரவளிக்க கூடிய ரசிகர்கள். அவர்களுக்கு கிரிக்கெட் நன்றாக தெரியும் மேலும் அவர்கள் கிரிக்கெட்டை காதலிக்கிறார்கள்.
இதையும் படிங்க : துபே 4வது ராகுல் 7வது.. பேட்டிங் ஆர்டரை மொத்தமாக மாற்றிய காரணம் இதுதான்.. அபிஷேக் நாயர் விளக்கம்
எனவே நான் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுவதை எப்பொழுதும் விரும்புகிறேன். இந்த மைதானத்தில் நான் சுமாராக ஒரு பத்தாயிரம் ரன்களுக்கு மேல் அடித்திருப்பேன்.இது எல்லாமே மிகவும் சிறப்பான அருமையான தருணங்களாக எனக்கு அமைந்திருக்கிறது” என்று நெகிழ்வாகக் கூறியிருக்கிறார்.