இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனால் அடுத்து நடைபெற உள்ள கடைசி ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் நிகழ்ந்த மாற்றங்கள் குறித்து துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயர் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 240 ரன்கள் குவித்தது. அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணி 42.2 ஓவர்களில் 208 ரன்கள் மட்டுமே குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் பறி கொடுத்தது. இந்திய அணியில் ரோஹித் சர்மா, கில் மற்றும் விராட் கோலி ஆகியோர் தொடக்க மூன்று வரிசைகளில் களமிறங்கினாலும் கடந்த போட்டியில் நான்காவது வீரராக வாஷிங்டன் சுந்தர் அனுப்பப்பட்டார்.
நேற்று நடைபெற்ற போட்டியில் நான்காவது வீரராக சிவம் துபே அனுப்பப்பட்டார். அவர் ஆட்டம் இழந்த பிறகு அக்சார் பட்டேல் அனுப்பப்படுகிறார். கடந்த போட்டியில் ஆறாவது வீரராக களமிறங்கிய கேஎல் ராகுல் நேற்றைய போட்டியில் ஏழாவது வீரராக களம் இறங்கி தான் சந்தித்த இரண்டாவது பந்தியிலேயே போல்ட் ஆகி வெளியேறினார். அணியில் செய்யப்பட்ட இத்தகைய பேட்டிங் மாற்றங்கள் குறித்து துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயர் போட்டிக்குப் பிறகு பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது ” நீங்கள் பேட்டிங்கில் 4, 5 அல்லது 6 வரிசையை பார்க்கும் போது அது சில சமயம் உங்கள் தலையில் ஏறி விளையாடலாம். இலங்கை அணியில் ஆப்ஸ் ஸ்பின்னர்கள் மற்றும் ஒரு லெக் ஸ்பின்னர் இருக்கின்றனர் என்பதை மனதில் வைத்து பேட்டிங் வரிசையில் இடது மற்றும் வலது காம்பினேஷன்களை உருவாக்கினோம். இந்த போட்டியில் தோல்வியடைந்தது ஆச்சரியம் அளிக்கக் கூடிய விஷயமா? என்று கேட்டால் உண்மைதான்.
ஏனெனில் இந்த ஆட்டம் சுழலுக்கு நன்கு சாதகமாக அமைந்ததால், இது ஆட்டத்தின் சூழ்நிலையை மாற்றும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இது போன்ற சூழ்நிலைகளில் பந்து நன்றாக திரும்பக்கூடும். இன்றைய போட்டியில் வாண்டர்சே பந்து வீசிய விதம், அவர் விரல்களை பயன்படுத்தியது, ஒவ்வொரு பந்தையும் ஸ்டம்பை நோக்கி அட்டாக் செய்து வீசியது இவை அனைத்தும் ஆடுகளத்தில் உதவி இருக்கும் போது நன்றாக உதவும். இன்று நாம் ஸ்ரீலங்காவின் செயல்பாட்டிற்கு அதிக மதிப்பெண்கள் கொடுக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:2 வருஷமா நான் இத ட்ரை பண்ணிட்டு இருக்கேன்.. எங்க டீமுக்கு கோச் கூட இல்லை – வெற்றிக்குப் பின் பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின்
இந்திய அணியின் இடது வலது காம்பினேஷன் திட்டத்தில் அக்ஷார் பட்டேல் மட்டுமே நன்றாக செயல்பட்டு இருக்கிறார். முதல் போட்டியில் 33 ரன்களும் இரண்டாவது போட்டியில் 44 ரன்களும் குவித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.






