இந்திய கிரிக்கெட்

விராட், ரோஹித் இல்லன்னா இந்திய அணிக்கு பிரச்சனையே வராது.. இந்திய முன்னாள் கோச் சர்ச்சை கருத்து

விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் இந்திய அணியின் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் பல ஆண்டுகளாக முக்கிய பங்களிப்பை செய்து வருகின்றனர். இந்நிலையில், இருவரின் எதிர்காலம் அவர்களது விருப்பம், உடற்தகுதி மற்றும் தேர்வாளர்களின் திட்டத்தை பொறுத்தே அமையும் என்று இந்திய முன்னாள் வீரரும் முன்னாள் தலைமைத் தேர்வாளருமான சந்தீப் பட்டீல் கூறியுள்ளார்.

- Advertisement -

தற்போதைய வீரர்களுடன் சேர்த்து, எதிர்காலத்தில் அவர்களுக்கு மாற்றாக விளையாடும் அளவுக்கு வலுவான வீரர்கள் இருக்கிறார்களா என்பதையும் தேர்வாளர்கள் பார்க்க வேண்டும். அந்த வகையில் இந்திய அணியின் பெஞ்ச் ஸ்ட்ரெந்த்தை கருத்தில் கொள்ளும்போது, விராட் கோலி அல்லது ரோஹித் சர்மா அணியில் இல்லாத சூழல் ஏற்பட்டாலும் பெரிய பிரச்சனை இருக்காது என்பது சந்தீப் பட்டீலின் கருத்தாக உள்ளது.

“விராட் அல்லது ரோஹித் அணியில் இல்லாவிட்டாலும் எந்தப் பிரச்சனையும் இருக்காது. இந்த இரண்டு வீரர்களும் பல ஆண்டுகளாக விளையாடி வருகிறார்கள், அவர்கள் இருவரும் லெஜெண்ட்களாக கருதப்படுவார்கள். ரோஹித் சர்மா வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் மிகச்சிறந்த வீரராக இருந்துள்ளார். விராட் கோலியைப் பொறுத்தவரை, அவரைப் பற்றி நான் எவ்வளவு சொன்னாலும் அது குறைவுதான்” என்று சந்தீப் பட்டீல் கூறினார். அடுத்த ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பை நடைபெறும் நிலையில் இந்த இரண்டு அனுபவ வீரர்களும் இந்திய அணிக்கு மிகவும் முக்கியம் என்று ரசிகர்கள் கருதி வரும் சூழ்நிலையில் இந்திய முன்னால் கோச் இப்படியான கருத்தை தெரிவிப்பது ரசிகர்களிடையே விவாதத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -
Published by

Recent Posts