ஐபிஎல்-க்கு வரும் ராகுல் டிராவிட்? எந்த அணி? இந்திய பயிற்சியாளர் பொறுப்பில் விலகல்?!

0
684
Dravid

ஒரே நேரத்தில் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி, தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ரவி சாஸ்திரியும் 2021 ஆம் ஆண்டு விலகிக் கொண்டார்கள்.

இந்த இடத்தில் இருந்து இந்திய அணியின் புதிய கேப்டனாக ரோஹித் சர்மாவும், புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டும் பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.

- Advertisement -

ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் இந்திய அணி இந்த ஆண்டு ஆசியக் கோப்பை வென்றதை முக்கியமானதாக சொல்லலாம். அடுத்து ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் அணியை இறுதிப்போட்டி வரை எடுத்துச் சென்றதையும் சொல்லலாம்.

இந்திய அணியின் துரதிஷ்டமாக சொந்த நாட்டில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரை வெல்ல முடியாமல் போனது வீரர்களை காயப்படுத்தி இருப்பது போலவே பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டையும் காயப்படுத்தி இருக்கிறது.

மேலும் அவர் தொடர்ச்சியாக பயிற்சியாளராக இந்திய அணியுடன் பயணம் செய்ய விரும்பவில்லை என்பதான தகவல்கள் வருகின்றன. அவர் மேற்கொண்டு தனது சொந்த மாநிலத்தில் பெங்களூரில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பொறுப்பை வகிக்க விரும்புகிறார் என்று தெரிகிறது.

- Advertisement -

இந்த நிலையில் ராகுல் டிராவிட் இல்லாத பொழுது இரண்டாவது இந்திய அணிக்கு பயிற்சியாளராக செயல்படும் விவிஎஸ் லட்சுமணன் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக வருவதற்கு விருப்பம் தெரிவித்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

தற்பொழுது ராகுல் டிராவிட் பயிற்சி விஷயத்தில் ஒரு அதிரடி திருப்பமாக அவர் ஐபிஎல் அணிக்கு மென்டராக வர வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது. குறிப்பாக அவர் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு மெண்டராக வரவிருக்கிறார் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இரண்டு வருடங்களாக லக்னோ அணிக்கு ஐபிஎல் தொடரில் கம்பீர் மென்டராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவர் தன்னுடைய பழைய அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மென்டராக திரும்பி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் லக்னாவுக்கு ராகுல் டிராவிட் செல்கிறார் என்று தெரிகிறது!