சிஎஸ்கேவுக்கு வந்தா சூப்பரா ட்ரீட் பண்ணுவாங்கன்னு வந்தா… இங்க அப்படியே வேற மாதிரி இருக்கு – ரஹானே பேட்டி!

0
111308

சிஎஸ்கே அணிக்கு எடுக்கப்பட்ட பிறகு தன்னை எப்படி ட்ரீட் செய்கிறார்கள் என்பது குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார் ரகானே.

சர்வதேச கிரிக்கெட்டில் மூன்றுவித போட்டிகளுக்கும் முன்னணி வீரராக இருந்து வந்த ரகானே, 2018 ஆம் ஆண்டிற்கு பிறகு மெல்ல மெல்ல லிமிடெட் ஓவர் போட்டிகள் இருந்து ஒதுக்கப்பட்டார்.

- Advertisement -

முழு நேரம் டெஸ்ட் வீரராகவும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வந்த ரஹானே, துணைகேப்டனாகவும் செயல்பட்டார். அதன் பின்னர் கடந்த ஓராண்டாக டெஸ்ட் போட்டிகளில் சரியாக செயல்படவில்லை என்று டெஸ்ட் அணியிலும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்ற இவரை 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி ரகானேவை ஆரம்ப விலையான 50 லட்சம் ரூபாய்க்கு எடுத்தது.

மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பு காயமடைந்ததால் இவர்களுக்கு பதிலாக பிளேயிங் லெவனில் எடுக்கப்பட்டார் ரஹானே. அந்த போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில் 29 பந்துகளில் 63 ரன்கள் விளாசி வெற்றிக்கு மிகமுக்கியப் பங்காற்றினார்.

- Advertisement -

அதன் பிறகு தொடர்ந்து இடம்பெற்று 30 ரன்கள், 37 ரன்கள் என வரிசையாக கிட்டத்தட்ட 150+ ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி மிடில் ஆர்டரில் நம்பிக்கை அளித்து வருகிறார். தொடர்ச்சியாக இரண்டாவது விக்கெட்டிற்கு இறக்கப்பட்டு வரும் இவருக்கு, “சிஎஸ்கே அணியில் முழு சுதந்திரமும் எந்தவித அழுத்தமும் இல்லாமல் தனது இயல்பான பேட்டிங்கை வெளிப்படுத்தும்படியும் அறிவுறுத்தினார்கள்.” என்று அவரே பேட்டி அளித்துள்ளார்.

இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட ரகானே, பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் சிஎஸ்கே அணிக்கு எடுக்கப்பட்டது பற்றி பகிர்ந்து கொண்டார். அப்போது ரகானே பேசியதாவது:

“சிஎஸ்கே அணிக்கு வெளியில் இருந்தபடி, சிஎஸ்கே வீரர்கள் அவர்களது அணியில் எப்படி மதிக்கப்பட்டு வருகிறார்கள் என்பதை பற்றி பலமுறை கேள்விப்பட்டிருக்கிறேன். முதல் முறையாக சிஎஸ்கே அணிக்கு எடுக்கப்பட்ட பிறகு அதை நானே உணர்ந்தேன். அவர்கள் கூறுவதை விட இன்னும் நெருக்கமாகவே பார்த்துக் கொள்கிறார்கள்.

வந்த முதல் நாள் முதல், இளம் வீரர்கள் சீனியர் வீரர்கள் என்கிற பாரபட்சம் இல்லாமல் நடத்துகிறார்கள். இதனால் தான் இந்த அணிக்கு வந்த பிறகு வேறு அணிக்கு செல்ல மனம் இல்லாமல் வீரர்கள் இனக்கம் ஆகிவிடுகிறார்கள்.

தோனியின் தலைமையில் நான் இந்திய அணியில் பல போட்டிகள் விளையாடி உள்ளேன். இங்கு இப்போதுதான் விளையாடுகிறேன். மாறுபட்ட அனுபவமாக இருக்கிறது. சிஎஸ்கே அணியை பொறுத்தவரை ஒன்றை மட்டும் நான் புரிந்து கொண்டேன். வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் அவர்கள் நம்மை நடத்தும் விதம் ஒருபோதும் மாறாது. பேருக்கு ஏற்றவாறு அன்பு செலுத்துகிறார்கள்.” என்றார்.