இந்த வீரர் ஏற்கனவே தனது கடைசி டெஸ்ட் இன்னிங்சை ஆடி விட்டார் – பார்த்தீவ் பட்டேல் கருத்து

0
785
Parthiv Patel about Ajinkiya Rahane

இந்திய அணி வீரர்கள் தற்போது இங்கிலாந்து சென்று 4 டெஸ்ட் போட்டிகளை முடித்துவிட்டு ஐபிஎல் தொடருக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சில வீரர்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத வண்ணமாக விளையாடினர். அதில் முக்கியமானவர் இந்திய அணியின் துணை கேப்டன் ரஹானே. நடந்து முடிந்த இங்கிலாந்து தொடரில் 7 இன்னிங்ஸ்களில் விளையாடி வெறும் 109 ரன்கள் மட்டுமே குவித்தார். இந்தத் தொடரில் அவரது சராசரி 15.57. இதனால் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போதே இவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று பலரும் குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.

இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த முன்னாள் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பார்த்தீவ் பட்டேல் ரகானே கிட்டத்தட்ட தனது கடைசி இன்னிங்சை ஆடி முடித்து விட்டதாகவே தோன்றுகிறது என்று கூறினார். 51 என்று இருந்த ரஹானேவின் டெஸ்ட் கிரிக்கெட் சராசரி கடந்த ஐந்து ஆண்டுகளில் 39.8 என்று ஆகிவிட்டது. எந்த அளவு கடந்த ஆண்டுகளில் இவரது ஆட்டம் மோசமாக மாறி விட்டது என்பதற்கு இதுவே மிகச்சிறந்த உதாரணம் என்றும் பார்த்திவ் பட்டேல் கூறியுள்ளார்.

- Advertisement -

இந்த ஐந்து ஆண்டுகளில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை ஒருமுறை உடனே வெளிப்படுத்தவில்லை என்றும் விமர்சித்துள்ளார். கன்சிஸ்டன்ட்டாக ரகானே ஒரு முறை கூட விளையாட வில்லை என்றும் இப்படி ஆடாத வீரர்களை நோக்கி கேள்விகள் தொடுக்க படுவது சகஜம் தான் என்றும் பார்த்திவ் கூறியுள்ளார்.

ரஹானேவின் ஆட்ட நுணுக்கங்கள் இலேயே பிரச்சனை இருக்கிறது என்றும் அவரது முன்னங்கால் தேவைக்கு தகுந்தது போல தகவமைத்துக் கொள்ளாமல் இருக்கிறது என்றும் பார்த்திவ் கூறியுள்ளார். ரகானே தொடர்ச்சியாக பெரிய இன்னிங்ஸ் எதுவும் ஆடாமல் இருப்பது இது போன்ற கேள்விகளுக்கு கண்டிப்பாக வழிவகுக்கும் என்றும் புஜாரா செய்தது போல ஒரு பெரிய இன்னிங்சை ஆட ரகானே தவறிவிட்டார் என்றும் பார்த்தீவ் பட்டேல் கூறியுள்ளார்.

விராட் கோலியும் ஃபார்ம் அவுட்டில் இருந்தாலும், அவரது ஆட்ட நுணுக்கங்களில் எந்த பிரச்சனையும் காணப்படவில்லை. மாறாக ரஹானேவின் ஆட்ட நுணுக்கங்களே அவருக்கு பிரச்சனையாக அமைந்துள்ளது. டி20 உலகக் கோப்பை தொடர் முடிந்ததும் வரை இருக்கும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரகானே இருப்பாரா இல்லையா என்பதை ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

- Advertisement -