சிஎஸ்கே ஐபிஎல் ஏலத்துல என்னை வாங்கும்னு நம்பினேன்.. ஆனா கடைசியில உடைஞ்சிட்டேன் – மயங்க் யாதவ் பேட்டி

0
495
Mayank

ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2022 ஆம் ஆண்டு மிகவும் மோசமான ஆண்டாக அமைந்தது. அந்த ஆண்டு முதல் முறையாக பத்து அணிகள் ஐபிஎல் தொடரில் விளையாட, ஐபிஎல் தொடரின் மிக வெற்றிகரமான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தையும், மற்றொரு வெற்றிகரமான அணி மும்பை இந்தியன்ஸ் பத்தாவது இடத்தையும் பிடித்து அதிர்ச்சி அளித்தனர்.

அந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடர் முழுக்க மும்பையில் வைத்து நடத்தப்பட்டது. கடலை ஒட்டி இருந்த காரணத்தினால் பந்து நன்றாக ஸ்விங் ஆனது. மேலும் மும்பையை ஒட்டி உள்ள மைதானங்கள் வேகப்பந்து வெற்றிக்கு உதவும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த இடத்தில்தான் சிஎஸ்கே அணி அடி வாங்கியது.

- Advertisement -

அந்த குறிப்பிட்ட ஐபிஎல் தொடரில் காயம் அடைந்திருந்த ஸ்விங் வேகப் பந்துவீச்சாளர் தீபக் சகர், மற்றும் மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடிய நியூசிலாந்தின் ஆடம் மில்னே இருவரும் காயத்தால் சிஎஸ்கே அணிக்கு விளையாட முடியாமல் போனது. இது சிஎஸ்கே அணியை பெரிய அளவில் பாதித்தது. அவர்கள் புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்திற்கு வந்தார்கள்.

ஆனால் 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் சுவாரசியமான ஒரு சம்பவம் என்னவென்றால், தற்பொழுது ஐபிஎல் தொடரில் அதிவேகத்தால் கலக்கிக் கொண்டிருக்கும் மயங்க் யாதவை யாரும் வாங்கவில்லை என்பதுதான். வெளியே சேர்ந்த இளம் வேகப்பந்துவீச்சாளரான அவர் ஏலத்திற்கு வரும் பொழுது, எந்த ஐபிஎல் அணிகளும் அவரை பொருட்படுத்தவில்லை. விற்கப்படாமல் இருந்த அவரைத்தான் லக்னோ அணி வாங்கியது. இன்று அந்த அணிக்கு 20 லட்சம் ரூபாயில் மிகப்பெரிய காரியங்களை செய்து கொண்டிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “ஏலத்தில் என் பெயர் வந்ததும் நான் சிஎஸ்கே மற்றும் டெல்லி அணிகளை பார்த்தேன். அவர்கள் எனக்காக ஏலத்தில் செல்வார்கள் என்று நான் நினைத்தேன். ஆனால் ஏலத்தில் முதலில் என்னை யாருமே வாங்கவில்லை. இதனால் நான் பெரிய அதிர்ச்சி அடைந்தேன். நான் எதிர்பார்த்த அணிகள் என்னை கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல் விட்டது எனக்குப் பெரிய விரக்தியாக அமைந்தது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : மயங்க் யாதவ் இத மட்டும் செஞ்சா.. அக்தரின் 161.3 கி.மீ உலக சாதனையை உடைக்கலாம் – பிரெட் லீ விளக்கம்

சிஎஸ்கே அணி அன்று இவரை வாங்கி இருந்தால், தற்பொழுது அந்த அணிக்கு நீண்ட வருடங்கள் விளையாடக்கூடிய சொத்தான வீரராக மாறி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியைச் சேர்ந்த கம்பீர் லக்னோ அணியின் மென்டராக இருந்ததால், டெல்லி வீரரான மயங்க் யாதவை கடைசியில் வாங்கியது பெரிய விஷயமாக அமைந்திருக்கிறது.