மட்டை போட்ட தோனி.. எச்சரிக்கை விடுத்த ரவி சாஸ்திரி.. 5 ஆண்டுகள் கழித்து வெளியான தகவல்

0
2109

இந்திய கிரிக்கெட் அணியில் முன்னாள் பில்டிங் பயிற்சியாளரான ஸ்ரீதர் தற்போது எழுதியுள்ள புத்தகத்தில் பல அதிர்ச்சிக்கர சம்பவங்கள் இடம் பெற்று இருக்கிறது. ஏற்கனவே தோனியின் கேப்டன் பதவிக்கு விராட் கோலி ஆசைப்பட்டு அதற்காக காய்களை நகர்த்தியதாக ஸ்ரீதர் குற்றச்சாட்டினார்.  இந்த நிலையில் தற்போது முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தோனியை கடுமையாக திட்டியதாக புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

2018 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி ஒருநாள் போட்டியில் விளையாடியது. அப்போது முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது சட்டத்தில் இந்தியா இக்கட்டான நிலையில் இருந்ததாக ஸ்ரீதர் குறிப்பிட்டுள்ளார். கடைசி 10 ஓவரில் ஒரு ஓவருக்கு 13 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது என்று சுட்டிக்காட்டிய ஸ்ரீதர் ஆனால் தோனி அதிரடியாக ஆட வேண்டிய நேரத்தில் பந்துகளை மட்டை போட்டு ஆறு ஓவரில் 20 ரன்கள் மட்டுமே சேர்த்ததாக ஸ்ரீதர் விமர்சித்துள்ளார்.

அந்த போட்டியில் தோனி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் பத்தாயிரம் ரன்களை கடந்ததாவும் ஆனால் இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியதாகவும் அவர் நினைவுகூர்ந்து உள்ளார். இதை எடுத்து அணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது ரவி சாஸ்திரி தோனியை மறைமுகமாக திட்டியதாக குறிப்பிட்டுள்ளார். அப்போது,  நாம் தோல்வியை அடைவது குறித்து எனக்கு கவலை இல்லை என்றும் ,ஆனால் போராடாமல் தோல்வியை தழுவி விட்டதாக ரவி சாஸ்திரி திட்டியதாக ஸ்ரீதர் கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும் நேற்று ஆட்டத்தில் போல் போராடாமல் மெதுவாக விளையாடினால் அவர்கள் யாராக இருந்தாலும் சரி அதுதான் அவர்களுக்கு கடைசி போட்டியாக எனது தலைமையில் இருக்கும் என்றும் தோனிக்கு மறைமுக எச்சரிக்கையும் ரவி சாஸ்திரி கொடுத்ததாக ஸ்ரீதர் தனது புத்தகத்தில் எழுதி உள்ளார். ரவி சாஸ்திரி இவ்வாறு பேசும்போது தோனி அவருடைய முகத்தையே பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்ததாகவும் ஸ்ரீதர் கூறியுள்ளார்.

- Advertisement -