உலக கோப்பை அணியில் இடம்பெற போகும் தமிழக வீரர்.. டிராவிட்டின் மாஸ்டர் பிளான்

0
1509
Ashwin

2023 ஆம் ஆண்டு ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி தொடர்ந்து இருக்கிறது. இந்த தொடர்கான இந்திய அணியை செப்டம்பர் 5ஆம் தேதிக்கு அறிவிக்க வேண்டும் என்பது விதி. இதனால் ஒவ்வொரு அணியும் தங்களது பிளேயிங் லெவனை இறுதி செய்தி வருகிறது.

இந்த நிலையில் இந்திய அணியில்  கூடுதலாக ஒரு ஆல் ரவுண்டர் இருந்தால் அது இந்திய அணிக்கு சாதகமான சூழ்நிலையாகும். இதற்கு காரணம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஜடேஜாவை சேர்த்து ஏழு பேட்ஸ்மேன்னுடன் களமிறங்கியது.

- Advertisement -

இதனால் எட்டாவது இடத்தில் பேட்டிங் தெரிந்த பந்துவீச்சாளர் தேவைப்படுகிறார். அந்த இடத்திற்கு சர்துல் தாக்கூர் சரிபட்டு வருவாரா என்ற விவாதம் தற்போது எழுந்துள்ளது. இந்திய அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்ட தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் உலகக் கோப்பை அணியில் சேர்க்க பயிற்சியாளர் ராகுல் டிராவிட் முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அஸ்வின் ஏற்கனவே தன்னுடைய பேட்டிங் திறமையை ஐபிஎல் தொடரில் நிரூபித்து இருக்கிறார். மேலும் எட்டு மற்றும் ஒன்பதாவது வீரராக அஸ்வின் நிலைத்து நின்று விளையாடுவார். இதன் காரணமாக அஸ்வினை அணிக்குள் கொண்டு வர யோசனை நடத்தப்பட்டு வருகிறது.

இதன் காரணமாகத்தான்  ஆசிய விளையாட்டு போட்டியில் அஸ்வினை இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை என கூறப்படுகிறது. ஏற்கனவே அக்சர் பட்டேல் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டாலும்,   அவரைப் போலவே ஜடேஜா இடது கை ஸ்பின்னர் ஆக இருக்கிறார்.

- Advertisement -

இதனால் ஒரே மாதிரி இருக்கும் இரு வீரர்கள் அணியில்  தேவையில்லை என்பதால் அந்த இடத்தில் அஸ்வின் களமிறக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனால் அஸ்வினை அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் களமிறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் அவர் எப்படி செயல்படுகிறார் என்பதை பார்த்து ஆசிய கோப்பை போட்டியிலும் அஸ்வின் சேர்க்க முடிவெடுக்கப்படலாம் என தெரிகிறது.