சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தான் இடம் தோல்வியை தழுவி தொடரை விட்டு வெளியேறி இருக்கிறது. இங்கிலாந்து அணியில் பல அதிரடி வீரர்கள் இருந்தும் 2019 ஆம் ஆண்டு உலக கோப்பை வென்ற பிறகு அந்த அணி ஒருநாள் கிரிக்கெட்டில் மீண்டும் தடுமாறி வருகிறது.
இதுகுறித்து தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின், இங்கிலாந்து அணிக்கு பல அறிவுரைகளை வழங்கியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர், “இங்கிலாந்து அணியின் பேட்டிங் தொடர்ந்து ஒரே மாதிரி இல்லை. இங்கிலாந்து அணியில் மார்க்கெட்டிங் மட்டும்தான் நடக்கிறது. அடுத்த தலைமுறையின் சிறந்த வீரர் என ஹாரி புரூக்கை விளம்பரப்படுத்தினார்கள். ஆனால் பேட்டிங்கை தற்போது தடுமாறி வருகிறார். இதனால் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது.”
சுய பரிசோதனை செய்யுங்கள்:
“போட்டியை வெல்ல தரக்கூடிய இன்னிங்ஸ் அவர் ஆட வேண்டிய கட்டத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார். பேஸ்பால் என அதிரடியாக விளையாடுகிறேன் என்ற பெயரில் இங்கிலாந்து அணி தடுமாறி வருகிறது. நமது அணியில் என்ன பிரச்சனை என்பது குறித்து அவர்கள் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.”
“ஜோ ரூட் மட்டும் அன்றைய ஆட்டத்தில் சதம் அடிக்கவில்லை என்றால் இங்கிலாந்து அணி படுதோல்வியை தழுவி இருக்கும். இங்கிலாந்து அணியின் செயல்பாடு குறித்து ரவி சாஸ்திரி அருமையான ஒரு விமர்சனத்தை வைத்திருந்தார். இங்கிலாந்த அணி ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடும் போது அதனை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டும்.”
ஆசிய மண்ணில் தடுமாறுகிறார்கள்:
“2019 உலகக்கோப்பை 2021 டி20 உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி வென்றது. ஆனால் ஆசிய கண்டத்தில் அவர்கள் பெரிய அளவு ஏதும் சாதிக்கவில்லை. ஆனால் ஆஸ்திரேலியா போன்ற அணிகள் இங்கு வந்து சிறப்பாக செயல்படுகிறார்கள்.
இதையும் படிங்க- ஐபிஎல் தொடரை சீண்டும் பாகிஸ்தான்.. அதே நேரத்தில் பிஎஸ்எல் 2025 தொடரை நடத்த ஏற்பாடு.. வெளியான அட்டவணை
ஆஸ்திரேலிய அணி நல்ல முறையில் தயாராகி வருகிறார்கள். தென்னாப்பிரிக்கா அணியும் நல்ல முறையில் தயாராகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் நன்றாக இங்கு விளையாடுகிறார்கள்” என்று அஸ்வின் கூறியுள்ளார்.