கையில் வெண்ணெய் வச்சிட்டு,எங்கேயா தேடுறீங்க? உலக கோப்பைக்கு அந்த பையனை தூக்கி போடுங்க.. அஸ்வின் யோசனை

0
2119

உலகக் கோப்பை தொடருக்கான அணியை அனைவருக்கும் முந்தி முதல் அணியாக ஆஸ்திரேலியா அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணி இன்னும் யாரை விளையாட வைப்பது என்று இன்னும் முடிவு எடுக்கவில்லை.

மேலும் கே.எல். ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் ஆகியோர் இன்னும் காயம் காரணமாக விளையாடவில்லை. இதுதான் இவர்களுக்கு பதிலாக யாரை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பத்தை ராகுல் டிராவிட் இருக்கிறார்.

- Advertisement -

இந்த நிலையில் தமிழகத்திற்கு அஸ்வின் இந்திய அணி நிர்வாகத்திற்கு ஒரு யோசனை வழங்கியிருக்கிறார். அதன்படி இந்திய அணியில் டாப் ஏழு பேட்ஸ்மேன்கள் வரிசையில் ஜடேஜா மட்டும்தான் இடது கை பேட்ஸ்மேனாக இருக்கிறார்.

இதனால் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் களமிறங்கிய திலக் வர்மாவை இந்திய அணி, உலக கோப்பையில் சேர்க்கலாம். திலக் வர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அவர் ரோகித் சர்மாவை போல் விளையாடுகிறார். இந்திய அணி வீரர்கள் போகப் போகத்தான் புல் ஷாட் எப்படி விளையாடுவது என்று கற்றுக் கொள்வார்கள். ஆனால் திலக் வர்மா ஆரம்பத்திலேயே அதனை சிறப்பாக செய்கிறார். உலகக் கோப்பை தொடருக்கு திலக் வர்மாவை நடுவரிசையில் சேர்க்கலாம். ஏனென்றால் இடதுகை பேட்ஸ்மேனுக்கு குடைச்சல் கொடுக்கும் ஸ்பின்னர்கள் எந்த அணியிலுமே இல்லை.

- Advertisement -

ஆனால் நமது அணியில் வலது கை பேட்ஸ்மேன்கள்தான் நிறைய பேர் இருக்கிறார்கள். இதன் காரணமாக திலக் வர்மாவை நடுவரிசையில் களம் இறக்கி பார்க்கலாம். எனினும் இரண்டு போட்டியை வைத்து நாம் ஏதும் முடிவு செய்யக்கூடாது என்பது உண்மைதான்.

ஆனால் இரண்டு ஆட்டங்கள் மூலமே அனைவரின் கவனத்தையும் திலக் வர்மா ஈர்த்து விட்டார். இதனால் அவரை அணியின் சேர்ப்பது குறித்து தேர்வுக்குழுவினர் நிச்சயமாக யோசிக்க வேண்டும். சாம்சன் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் நன்றாகவே விளையாடுகிறார். எனினும் திலக் வர்மாவை கூடுதல் ஆப்சன் ஆக தேர்வு செய்யலாம் என அஸ்வின் வலியுறுத்தியுள்ளார்.