இந்திய தேசிய கிரிக்கெட் அகாடமியில் இன்னொரு பெட் போடுங்க.. பேஷன்ட் வருது – இந்திய முன்னாள் வீரர் அதிரடி!

0
1186
ICT

இந்திய கிரிக்கெட் வீரர்களின் காயம் மற்றும் மறுவாழ்வு என அனைத்தையும் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு பெங்களூரில் அமைந்திருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு இருக்கிறது!

வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் தேசிய கிரிக்கெட் அகாடமியின் வழிகாட்டல் படியே காயத்திற்கான மருத்துவம் பார்க்கப்படுதல் மற்றும் காயத்தில் இருந்து மீண்டு வருதல் அனைத்தையும் வீரர்கள் செய்ய வேண்டும்.

- Advertisement -

மேலும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருக்கும் மருத்துவர்கள் உடல் தகுதி சான்று அளித்தால் மட்டுமே இந்திய அணியின் தேர்வில் கலந்து கொள்ள முடியும். உடல் தகுதியை மேம்படுத்திக் கொள்வதற்கும் இந்திய தேசிய கிரிக்கெட் அகாடமியை இந்திய வீரர்கள் நாடலாம். இந்திய கிரிக்கெட்டில் தேசிய கிரிக்கெட் அகாடமி மிக முக்கிய பங்கு வகிக்கும் இடமாக இருக்கிறது!

இந்த நிலையில் தன்னுடைய கிரிக்கெட்டை மேம்படுத்திக் கொள்வதற்காக இங்கிலாந்து சென்று ஒருநாள் கிரிக்கெட் கவுண்டி போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடி இரட்டை சதம் மற்றும் சதம் என தொடர்ச்சியாக விளாசி அனைவரதும் கவனத்தையும் இளம் வீரர் பிரித்வி ஷா ஈர்த்திருந்தார். இந்த நிலையில் எதிர்பாராமல் கால் முட்டியில் ஏற்பட்ட காயத்தால் அவர் மேற்கொண்டு இரண்டு மாதங்களுக்கு விளையாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். எனவே அவர் இந்தியா திரும்புகிறார்.

தற்பொழுது இது குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா ” பிரித்வி ஷா மீண்டும் திரும்பி வந்தது போல் தெரிந்தது. அவர் இங்கிலாந்து சென்று சிறப்பாக விளையாடினார். அவர் மீண்டு வருவதற்கு சிறப்பான முறையில் முயற்சிகள் மேற்கொண்டார். முதல் போட்டியில் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டம் இழந்தார். மக்கள் அவர் மீது நிறைய முட்டாள்தனமான விமர்சனங்களை வைத்தார்கள். ஆனால் அதன் பிறகு அவர் நிறைய ரன்கள் குவித்தார்.

- Advertisement -

அவர் மிகவும் நன்றாக பேட்டிங் செய்தார். அவருக்கு தற்பொழுது முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. நிலைமைகள் சரியாக கொண்டு இருக்கும் பொழுது இப்படி எதிர்பாராத விதமாக ஒரு காயம் வந்துவிட்டது. இப்பொழுது அவர் நாடு திரும்புகிறார். அவரது இங்கிலாந்து சுற்றுப்பயணம் முடிந்து விட்டது. அவருக்கு இப்பொழுது தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஒரு இருக்கை ஒதுக்கப்படும். அப்படித்தான் நடக்கப் போகிறது.

அவர் இன்னும் இளமையாக இருக்கிறார். இளம் வயதிலேயே அதிக உயரங்களையும் ஏற்ற இறக்கங்களையும் அவர் வாழ்க்கையில் சந்தித்து விட்டார். சர்வதேச அறிமுக போட்டியிலேயே சதம் அடித்தார். பின்பு ஐபிஎல் தொடரில் வெளியே அமரவும் வைக்கப்பட்டார். அவர் எல்லாவற்றையும் பார்த்திருக்கிறார். நாங்கள் அவரிடம் பெரும் எதிர்பார்ப்பு வைத்திருந்தோம். சில நேரம் அதிர்ஷ்டத்திற்கு எதிராக போரிடுவது கடினமானது!” என்று கூறியிருக்கிறார்!