ரிக்கி பாண்டிங் என்கிட்ட அந்த விஷயத்தை சொல்லவே இல்ல.. ஸ்ரேயாஸ் வேற மாதிரி ரகம் – நெகேல் வதேரா பேட்டி

0
50
Nehal

நேற்று ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் இம்பேக்ட் பிளேயராக பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு வந்து மிகச் சிறப்பாக செயல்பட்ட நெகேல் வதேரா பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பற்றி பேசியிருக்கிறார்.

நேற்றைய போட்டியில் அவர் 25 பந்துகளை எதிர் கொண்டு 43 ரன்கள் எடுத்தார். இவரது அதிரடியின் காரணமாக 172 ரன்கள் என்கின்ற இலக்கை பஞ்சாப் கிங்ஸ் அணி வேகமாக 16.2 ஓவர்களில் எட்டி நல்ல ரன் ரேட் உடன் வெற்றி பெற்றது. இவரது அதிரடியான ஆட்டம் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு நல்ல நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

- Advertisement -

ரிக்கி பாண்டிங் சமயோசித முடிவு

நேற்று பஞ்சாப் கிங்ஸ் முதலில் பந்து வீசிய நிலையில் இம்பேக்ட் பிளேயர் லிஸ்டில் கடந்த போட்டியில் அணியை வெற்றி பெற வைத்த வேகப்பந்துவீச்சாளர் வைசாக் விஜயகுமார் மற்றும் நெகேல் வதேரா இருவரும் வைக்கப்பட்டு இருந்தார்கள். ஆனால் இந்த முறை ரிக்கி பாண்டிங் மிகவும் வித்தியாசமான ஒரு முடிவை எடுத்து அசத்தினார்.

இந்த போட்டியில் அசமத்துல்லாஹ் ஓமர் சாயை நீக்கி முழு நேர வேகப்பந்துவீச்சாளர் பெர்குஷனை கொண்டு வந்திருந்தார். இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு வைசாக் விஜயகுமார் தேவைப்படவில்லை. சரியான நேரத்தில் நெகேல் வதேராவை களம் இறக்கினார். அவரது இந்த சமயம் செய்த முடிவு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு நல்ல பலன் கொடுத்தது.

- Advertisement -

ரிக்கி பாண்டிங் என்னிடம் சொல்லவில்லை

இது குறித்து பேசி இருக்கும் நெகேல் வதேரா கூறும்பொழுது “எனக்கு இந்த போட்டியில் விளையாடுவது குறித்து அதிக பதட்டம் எதுவும் கிடையாது. ஆனால் நான் இந்த போட்டியில் விளையாடுவேன் என ரிக்கி பாண்டிங் என்னிடம் கூறவில்லை. எனவே நான் ஒரு கிட் பேக் மட்டுமே கொண்டு வந்தேன். பிறகுதான் விளையாடுகிறேன் என்று அறிந்தேன். எங்கள் அணியில் இன்று அனைவருமே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்”

இதையும் படிங்க : இந்த பையன் என்ன பண்ணறான்?.. லக்னோ வீரருக்கு எதிர்ப்பு.. பிசிசிஐ அதிரடி தண்டனை.. ஆரம்பமே சோகம்

“ஸ்ரேயாஸ் கேப்டன் ஆக இருந்து அணியை வழிநடத்தக்கூடிய விதம் மிகவும் சிறப்பாக இருக்கிறது. அவர் என்னுடைய இயல்பான ஆட்டத்தில் தொடர்ந்து செல்லும்படி உற்சாகப்படுத்தினார். கடந்த இரண்டு வருடங்களில் நான் பெற்ற அனுபவத்தை தற்பொழுது பஞ்சாப் அணிக்கு கொடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -