நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணியின் பவுலர் திக்வேஷ் சிங் நோட்புக் செலிப்ரேஷன் செய்ததற்காக பிசிசிஐயால் தண்டிக்கப்பட்டிருக்கிறார். மேலும் முன்னாள் வீரர்கள் பலரும் அவரது செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி அதிரடியாக விளையாடி 16.2 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி அதிரடியாக வெற்றி பெற்றது. மேலும் அந்த அணிக்கு இரண்டாவது போட்டியில் இரண்டாவது வெற்றியாக அமைந்தது. லக்னோ அணி மூன்றாவது போட்டியில் இரண்டாவது போட்டியை தோற்றது.
முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு
தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு டெல்லியை சேர்ந்த இளம் வீரர் பிரியன்ஸ் ஆர்யா தொடக்க ஆட்டக்காரராக விளையாடி வருகிறார். இவர் கடந்த ஆண்டு டெல்லி பிரிமியர் டி20 லீக்கில் ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்து அனைவரது கவனத்தையும் கவர்ந்தார். இதைத் தொடர்ந்து பஞ்சாப் கிங்ஸ் அணி மெகா ஏலத்தில் அவரை வாங்கியது. மேலும் விளையாடுவதற்கு வாய்ப்பும் கொடுத்திருக்கிறது.
இதைத் தொடர்ந்து நேற்றைய போட்டியில் திக்வேஷ் சிங் பந்துவீச்சில் பிரியன்ஸ் ஆர்யா 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அப்போது பெவிலியன் சென்று கொண்டிருந்த பிரியன்ஸ் ஆர்யாவிடம் திக்வேஷ் சிங் ஓடிச் சென்று நோட்புக் செலிப்ரேஷன் செய்தார். இருவரும் டெல்லி பிரிமியர் லீக்கில் தெற்கு டெல்லி அணிக்கு ஒன்றாக விளையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக பிரியன்ஸ் ஆர்யா இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு
இந்த நிலையில் இதற்கு கிரிக்கெட் வர்ணனையில் இருந்த முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். கவாஸ்கர் இதற்கு நேரலையிலேயே எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் முகமது கைப் பேசும் பொழுது ” அந்தப் பையன் என்ன செய்து கொண்டிருக்கிறான்? யாருக்கு என்ன கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறான்? அதுதான் பேட்ஸ்மேன் தானாகவே ஃபெவிலியன் போகிறாரே? இதுவெல்லாம் தேவையில்லாதது” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : 32/5.. பாபர் அசாம் 1 ரன்.. நஷிம் ஷா 51 ரன்.. பரிதாபமாக சுருண்ட பாகிஸ்தான்.. நியூசி அணி தொடரை வென்றது
இந்த நிலையில் களத்தில் இருந்த நடுவர்கள் இதை லெவல் 1 குற்றமாக அறிவித்திருக்கிறார்கள். மேலும் அவருடைய சம்பளத்தில் இருந்து 25% அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அவருக்கு ஒழுக்க செயல்பாட்டுகளுக்கான புள்ளியில் ஒரு புள்ளி குறைக்கப்பட்டிருக்கிறது. முதல் முறையாக ஐபிஎல் தொடரில் விளையாடும் அவருக்கு இது பெரிய தண்டனையாக அமைந்திருக்கிறது!






