4,6,4,4,6,1.. ஹர்சல் படேல் 20வது ஓவர் ஜடேஜா போல் நொறுக்கிய அபிஷேக் போரல்.. யார் இவர்?

0
143
Porel

இன்று 17 வது ஐபிஎல் சீசனில் மொத்தம் 2 போட்டிகள் நடைபெறுகிறது. முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் டெல்லி கேப்பிடல் அணியும் பஞ்சாபில் அமைந்துள்ள புதிய மைதானம் முல்லன்பூரில் விளையாடி வருகின்றன.

இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகர் தவான் புதிய மைதானம் என்கின்ற காரணத்தினால் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுப்பதாக கூறியிருந்தார். டெல்லி கேப்பிடல்ஸ் அணி அதிரடியாக இந்திய துவக்க வீரர் பிரிதிவி ஷாவை நீக்கி இருந்தது.

- Advertisement -

இந்த முறை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு துவக்க வீரராக வந்த மிட்சல் மார்ஸ் அதிரடியாக 12 பந்தில் 20 ரன்கள், டேவிட் வார்னர் 21 பந்தில் 29 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். மூன்றாவது இடத்தில் வந்த வெஸ்ட் இண்டிசை சேர்ந்த ஷாய் ஹோப் 25 பந்தில் 33 ரன்கள், ரிஷப் பண்ட் 13 பந்தில் 18 ரன்கள் என வெளியேறினார்கள்.

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு தொடர்ந்து ரிக்கி புய் 3, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 5, அக்சர் படேல் 21, சுமித் குமார் இரண்டு ரன்கள் என வரிசையாக வெளியேறினார்கள். ஒரு கட்டத்தில் 138 ரன்கள் 7 விக்கெட்டுகளை டெல்லி கேப்பிட்டல்ஸ் இழந்திருந்த பொழுது, பந்து வீச்சாளருக்காக ஒதுக்கப்பட்டு இருந்த இம்பேக்ட் பிளேயர் இடத்தில், ரன்கள் குறைவாக இருப்பதால் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் அபிஷேக் போரல் களம் இறக்கப்பட்டார்.

கடைசி ஓவரில் மாறிய ஆட்டம்

டெல்லி கேப்பிடல்ஸ் அணி 19 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இறுதி ஓவரை வீசுவதற்காக, நடந்து முடிந்த ஐபிஎல் மினி களத்தில் 11 கோடி ரூபாய்க்கு மேல் கொடுத்து வாங்கப்பட்ட ஹர்ஷல்படேல் வந்தார்.

- Advertisement -

ஹர்சல் படேலின் இருபதாவது ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு அடித்த அபிஷேக் போரல் தொடர்ந்து இரண்டு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் என ஐந்து பந்தில் 24 ரன்கள் நொறுக்கி தள்ளினார். கடைசிப் பந்தில் ஒரு ரன் கிடைக்க அந்த ஓவரில் மட்டும் மொத்தம் 25 ரன்கள் வந்தது. டெல்லி கேப்பிடல்ஸ் அணி இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் குவித்தது.

இதையும் படிங்க : முசிர் கான் 38 பந்தில் சதம்.. 19 பவுண்டரிகள் 10 சிக்ஸர்கள்.. ஐபிஎல் தொடரில் வாய்ப்பு கிடைக்குமா?

இதேபோல் ஐபிஎல் தொடரில் ஹர்சல் படேல் ஆர்சிபி அணிக்கு விளையாடிய பொழுது, சிஎஸ்கே அணியின் ரவீந்திர ஜடேஜா ஒரே ஓவரில் 36 ரன்கள் கடைசி கட்டத்தில் அடித்து நொறுக்கினார். இன்று அபிஷேக் போரல் 4, 6, 4, 4, 6, 1 என அடித்து நொறுக்கியது அதை அப்படியே திரும்ப ஞாபகப்படுத்தியது போல் இருந்தது. தற்பொழுது 21 வயதாகும் இடதுகை விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் அபிஷேக் போரல் பெங்கால் அணிக்காக உள்நாட்டு கிரிக்கெட் விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.