சாய் கிஷோருக்குதான் எல்லா பெருமையும்.. இனிமே எல்லா மேட்சையும் ஜெயிக்கப் போறோம் – சாம் கரன் பேட்டி

0
20
Curran

இன்று பஞ்சாப் முல்லன்பூர் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதி கொண்ட போட்டி நடைபெற்றது. வழக்கம்போல் இந்த போட்டியையும் 20வது ஓவருக்கு நகர்த்திச் சென்று, பஞ்சாப் கிங்ஸ் அணி தோல்வி அடைந்தது.

பஞ்சாப் கிங்ஸ் அணி இன்று டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து ஆச்சரியப்படுத்தியது. மேலும் பவர் பிளேவில் சிறப்பாக விளையாடி 56 ரன்கள் எடுத்தது. ஆனால் அதற்குப் பிறகு ஒட்டுமொத்தமாகவே மொத்தம் 142 ரன்கள் மட்டுமே 20 ஓவரில் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

- Advertisement -

இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் சரிவை பவர் பிளே முடிந்து நூர் அகமது ஆரம்பித்து வைத்தார். இதற்கு அடுத்து அதை அப்படியே சாய் கிஷோர் தொடர்ந்தார். அவர் மொத்தம் நான்கு ஓவர்களில் 33 ரன்கள் தந்து நான்கு முக்கிய விக்கெட்டுகளை சாய்க்க, பஞ்சாப் கிங்ஸ் அணி அங்கேயே சுருண்டு விட்டது.

ஆனாலும் கூட பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சாளர்கள் நல்ல போராட்டத்தை வெளிப்படுத்தி போட்டியை 20வது ஓவர் வரை எடுத்துச் சென்றார்கள். ராகுல் திவாட்டியா வழக்கம் போல் பொறுப்பாக இறுதிக்கட்டத்தில் விளையாடி குஜராத் அணியை வெல்ல வைத்து விட்டார். இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட சாய் கிஷோர் ஆட்டநாயகன் விருது வென்றார்.

இன்றைய போட்டியின் தோல்விக்கு பின் பேசிய பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் சாம் கரன் “நாங்கள் 10 முதல் 15 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம் என்று நினைக்கிறேன். நாங்கள் பந்துவீச்சில் வெளிப்படுத்தும் போராட்டம் மற்றும் அர்ப்பணிப்பு எப்பொழுதும் ஆச்சரியமானதாக இருந்து வருகிறது. ஆனால் அது போதுமானதாக இல்லை. ஆப்கானிஸ்தான் சுழற் பந்துவீச்சு கூட்டணி உலகத் தரமானது.

- Advertisement -

இதையும் படிங்க : 20-25 நாட்களுக்கு ஒரு முறை வாய்ப்பு தராங்க.. நெக்ரா என்னை இப்படித்தான் தயார் பண்ணினார் – தமிழகத்தின் சாய் கிஷோர் பேட்டி

அதே சமயத்தில் சாய் கிஷோர் மிகச் சிறப்பாக செயல்பட்டார். அதற்கான பெருமை அவருக்கே சேரும். நாங்கள் இந்த ஆடுகளத்தில் மூன்றாவது போட்டி விளையாடுகிறோம். 160 ரன்கள் எடுத்தால் சரியாக இருந்திருக்கும். பவர் பிளேவில் நன்றாகத் தொடங்கினோம். ஆனால் அதன் பிறகு துரதிஷ்டவசமாக விக்கெட்டுகளை இழந்தோம். இப்போது என்ன செய்வது என்று எங்களுக்கு தெரியும். நாங்கள் ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெற வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.